'காரை வீடாக்கிய டாக்டர்...' 'ஃபேமிலி கூட வீடியோ கால் பண்ணி பேசுறேன்...' மனைவி, குழந்தைக்கு கொரோனா வரக்கூடாது என டாக்டர் எடுத்த முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தன்னுடைய குடும்பத்திற்கு பரவிடக் கூடாது என்று மருத்துவமனை வளாகத்தில் தனது காரிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்றாலும் ஐந்தாயிரம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நபர்களை குணமாக்கும் முயற்சிகளில் மருத்துவர்கள் இரவுப் பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் வீடுகளுக்கே செல்வதில்லை. தன் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் பாதித்துவிடும் என்ற பயம் இருப்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலின் ஜே.பி.மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர் சச்சின் நாயக் வீட்டுக்கு செல்லாமல் தன்னுடைய காரிலேயே தன்னை தனிமைப்படுத்தி வருகிறார்.
ஜே.பி. மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் சச்சின் நாயக், தன்னுடைய பணி முடிவடைந்த பின்பு வீட்டுக்குச் செல்லாமல் தன்னுடைய காரையே தங்குமிடமாக மாற்றியுள்ளார். எங்கே தான் வீட்டுக்குச் சென்றால் கொரோனா வைரஸ் தன் மனைவியையும் குழந்தையையும் பாதித்துவிடுமோ என்ற பயமே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய காரை மருத்துவமனை வளாகத்திலேயே இருப்பிடமாக மாற்றியுள்ள சச்சின் நாயக், அதில் தன்னுடைய அத்தியாவசியப் பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வைத்துள்ளார். ஓய்வு நேரத்தில் காரில் வைத்திருக்கும் புத்தகங்களைப் படிப்பது. பின்பு, தன்னுடைய குடும்பத்தினரிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசுவது என தனக்கான ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கே செல்லாமல் காரிலேயே உறங்கியும் வருகிறார். சச்சின் நாயக் காரிலேயே தங்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த நிகழ்வு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தெரியவர, அவரும் சச்சின் நாயக்கின் மருத்துவ தொழிலுக்கான அர்ப்பணி்பபை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... சாலையில் சுற்றி திரிந்த முதியவருக்கு... சாக்கு மூட்டையில் காத்திருந்த அதிர்ச்சி!
- பள்ளி, கல்லூரிகள் 'திறப்பது' மீண்டும் தள்ளிப்போகுமா?... வெளியான 'புதிய' தகவல்!
- ‘கறிக்கடை திறக்க தடை’.. ‘வாரத்துக்கு 3 நாள் மட்டுமே மளிகைக்கடை திறந்திருக்கும்’.. மாவட்ட ஆட்சியர் அதிரடி..!
- "மோடி உண்மையில் பெரிய மனிதர் தான்..." நேற்று 'மிரட்டல்' விடுத்த 'ட்ரம்ப்'... இன்று 'திடீர் பாராட்டு'... 'எதற்காகத் தெரியுமா?'
- 'கொரோனாவை போலவே மற்றொரு கொடூரம் இது!'... திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை!
- 'கொரோனாவால்' இறந்த 'கர்ப்பிணி பெண்...' ஆனால் 'வைரஸ் பாதிப்பில்லாமல்' பிறந்த 'அழகு குழந்தை...' 'ஆச்சரியமடைந்த மருத்துவர்கள்...'
- ‘அவரை மாதிரி எல்லா நடிகர்களும் உதவ முன்வரணும்’.. நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்..!
- ‘உலகை அழிக்கணும்னா 5 நாள்லயே செஞ்சு காட்டிருப்பாங்க’.. ‘கொரோனா நடத்தியிருக்கும் பெரும்பாடம்’.. சீமான் ட்வீட்..!
- 'இது தான் நடந்துச்சு!'... 'நாங்க இப்படி தான் கொரோனாவ கட்டுப்படுத்தினோம்!'... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீனா!
- 'எதிரிக்கு கூட இப்படி ஒரு சாவு வரக்கூடாது'...'வீட்டு வாசலில் கிடக்கும் சடலங்கள்'...'சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள்'!