'Dude, கொரோனான்னு ஒண்ணு கிடையாது'... 'அப்படி சொல்றவங்களுக்கு'... 'ஒரு டாக்டரா இத சொல்ல கூடாது, ஆனா சொல்றேன்'... நெஞ்சை நொறுக்கும் கண்ணீர் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள கண்ணீர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் கோரத் தாண்டவமாடி வருகிறது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் தான். தினசரி பாதிப்பு 55 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இதில் பெரும் சோகம் என்னவென்றால் தலைநகர் மும்பையில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பது பெரும் திண்டாட்டமாக உள்ளது. இங்குள்ள மருத்துவமனைகளில் தொற்று பாதித்த நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பி விட்டன. தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பி விட்டன.
மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறையும் நிலவுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 தனியார் மருத்துவமனைகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் மும்பையில் தற்போது ஒருவித அசாதாரணமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில் தொற்றுநோய் நிபுணரான டாக்டர் தி்ருப்தி கிலாடா கண்ணீர் ததும்பப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ''ஒரு மருத்துவராக இதைச் சொல்வதற்குக் கஷ்டமாக உள்ளது.
ஆனால் நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. மக்கள் பீதியடைந்துள்ளனர். நாங்கள் அதிகமான நோயாளிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. படுக்கைகள் இல்லாததால் மோசமான நிலையிலிருக்கும் நோயாளிகள் வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள். முதலில் நீங்கள் அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.
உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ அல்லது கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தாலோ நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம் அல்லது உங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் தவறு செய்கிறீர்கள். பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவ முடியாது.
கொரோனா எல்லா இடங்களிலும் உள்ளது. அதனால் முககவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி கடுமையான பாதிப்பைத் தடுக்க உதவும்'' என அந்த வீடியோவில் உருக்கமாகப் பேசியுள்ளார். கொரோனா தீவிரமாகப் பரவி வரும் இந்த நேரத்திலும் சிலர் மாஸ்க் அணியாமலும், கொரோனா என்று ஒரு வியாதியே கிடையாது என விதண்டாவாதம் பேசிக் கொண்டு இருப்பதை இன்னும் காண முடிகிறது.
அவ்வாறு பேசிக் கொண்டு இருப்பவர்கள் இதுபோன்று மருத்துவர்கள் படும் கஷ்டத்தைச் சிறிதேனும் நினைத்துப் பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உயர்ந்தது கொரோனா தடுப்பூசியின் விலை...! ஒரு தடுப்பூசியோட விலை எவ்வளவு தெரியுமா...? சீரம் நிறுவனம் அதிரடி அறிவிப்பு! - அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
- 'லாபம்' அப்படிங்குறது 'கெட்ட வார்த்தை' இல்ல...! மத்திய அரசின் 'அந்த' அறிவிப்பை பாராட்டி தள்ளிய ஆனந்த் மஹிந்திரா...!
- 'எதிரே வந்தவர் மீது எச்சிலை துப்பிய இளைஞர்'... 'கொரோனா வார்டில் அமர்க்களம்'... 'மனைவியுடன் எஸ்கேப்'... பரபரப்பு சம்பவம்!
- BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி...' என்ன மீட் பண்ணவங்க உடனே 'இத' பண்ணுங்க...! - ட்விட்டரில் வேண்டுகோள்...!
- 'கொரோனா தடுப்பூசி'... 'மே 1ஆம் தேதி முதல் இந்த வயதுக்கு மேற்பட்டோர் போடலாம்'... மத்திய அரசு!
- 'என் கணவருக்கு முத்தம் கொடுக்கணும்னா எப்படி கொடுப்பேன்'... 'இப்போ நாங்க என்ன சொல்லிட்டோம்'...'போலீசாரிடம் சீறிய பெண்'... வைரலாகும் வீடியோ!
- 'வேணும்னே அப்படி சொல்லல...' 'ஆக்சுவலா நான் என்ன சொல்ல வந்தேன்னா...' - முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்...!
- VIDEO: 'விட்டா போதும்டா சாமின்னு...' 'தெறிச்சு ஓடிய பொதுமக்கள்’... 'ஏதும் செய்ய முடியாமல்... முழிபிதுங்கி நின்ற ரயில்வே ஊழியர்கள்...! - வைரல் வீடியோ
- ‘மிரட்டும் கொரோனா பாதிப்பு’!.. இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘முழு ஊரடங்கு’.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
- 'இரவு நேரத்தில் முழு ஊரடங்கா'?... 'சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா'?... 'அரசு என்ன சொல்ல போகிறது'... எதிர்பார்ப்பில் மக்கள்!