'இந்த ஆடைக்குள் இருக்கும் வேதனை'... 'கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்'... 'உடைந்து நொறுங்கி போன நெட்டிசன்கள்'... வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கவச உடையைக் கழற்றிய பின்னர் மருத்துவர் என்ன நிலையில் பணி செய்து வருகிறார் என்பதைப் பார்க்கும் போது கல் நெஞ்சமும் கரைந்து விடும்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் கொரோனா பாதித்த மக்கள் பலரும் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. மக்கள் கொரோனாவால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அந்த அளவிற்கு மருத்துவர்களுக்கும் கடும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.

குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல் மருத்துவர்களை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்துமாறு உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயராத பணி, கொரோனா குறித்த அச்சம் என மருத்துவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் கவச உடையை அணிந்து மருத்துவம் பார்ப்பதே பெரும் சுமையாக உள்ளது. ஏற்கனவே நோயாளிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும் மருத்துவமனைக்குள் கவச உடையை அணிந்து கொண்டு மருத்துவம் பார்ப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல.

அந்த வகையில் கொரோனா பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு மருத்துவம் பார்த்துவிட்டு அதிலிருந்து வெளியே வந்த பின்னர் ஒரு மருத்துவரின் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படத்தை மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ளார். shoil என்ற மருத்துவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்தாலே கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

தற்போது மருத்துவர் Shoil பதிவிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், எங்கள் இதயமே நொறுங்கி விட்டதை போல உணர்கிறோம். உங்களின் தியாகத்தை மதிப்பதாக இருந்தால் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே மருத்துவர்களுக்கும் இதிலிருந்து விடுதலை கிடைக்கும் எனப் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்