Video: 'பெண்' மருத்துவரின் இறுதி ஊர்வலத்தில்.. கதறியழுத 'அம்மா'.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பிரியங்காவின் உடல் ஹைதராபாத்தில் உள்ள பூரணபுல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்திற்கு முன் பிரியங்காவின் அம்மா அவரை நினைத்து கதறியழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. உடைந்து அழும் பிரியங்காவின் அம்மாவுக்கு மன ஆறுதல் கிடைக்க வேண்டும் என்றும், இதுபோல இன்னொரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது.

எனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நால்வரையும் தூக்கில் போடவேண்டும் என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக மாறிவருகிறது எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்