'டாக்டர் எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்'... 'பேசிக்கொண்டிருக்கும் போதே பளார் விட்ட பெண் செவிலியர்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெவிலியரும் மருத்துவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் கொரோனா பெருந்தொற்று காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு முறையாக இல்லாததால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் பணியிலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் ஒருவர் செவிலியரைப் பார்த்துத் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த செவிலியர் மருத்துவரை பளார் எனக் கன்னத்தில் அறைந்தார்.
இதனால் கோபமடைந்த மருத்துவர் அந்த பெண் செவிலியரைத் திருப்பி தாக்கியதில் மருத்துவமனை களேபரம் ஆனது. இதற்கிடையே பெண் செவிலியர் மற்றும் மருத்துவரிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தமே மோதலுக்குக் காரணம் என்று இருவரும் கூறியுள்ளனர்.
ஒரு புறம் கொரோனா காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வரும் நிலையில், மருத்துவர்கள் செவிலியர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி மோதலில் ஈடுபட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்'!.. சொந்த ஊருக்கு கிளம்பும் முன்... சக வீரர்களிடையே 'பீதி'யை கிளப்பிய ஆண்ட்ரு டை!
- 'எங்கள் இதயமே நொறுங்கி போனது'... 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு'?... உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி!
- 'பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடலாமா'?... நிதி ஆயோக் விளக்கம்!
- வேற வழி இல்ல...! இந்த 'முடிவுகளை' இப்போதைக்கு எடுத்து தான் ஆகணும்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட HCL நிறுவனம்...!
- 'மேட்ச் நேரத்துல எவ்வளவு திட்டி இருப்போம்'... 'இந்தியர்களுக்காக ஷோயப் அக்தர் விடுத்த வேண்டுகோள்'... நெகிழ வைத்த பாகிஸ்தான் நெட்டிசன்கள்!
- 'அச்சுறுத்தும் கொரோனா'... 'தயவு செஞ்சு இந்த மருந்தை நீங்களே எடுத்துக்காதீங்க'... சற்று ஆறுதலான செய்தியை சொன்ன சுகாதாரத்துறைச் செயலாளர்!
- 'வயசு 22 இருக்கும்'... 'அவங்க பெத்தவங்க என்கிட்ட கேட்ட கேள்வி'... 'என் மனசை துளைச்சு எடுத்துடுச்சு'... இளம் மருத்துவர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!
- 'அச்சுறுத்தும் கொரோனா'... 'இந்திய மக்களே பயப்படாதீங்க, கொஞ்சம் திரும்பி பாருங்க'... நெகிழ வைத்துள்ள பிரான்ஸ் அதிபர்!
- 'நாங்க எதாவது ஹெல்ப் பண்ணனுமா?... 'இதெல்லாம் பண்ண ரெடி'... கை கொடுக்க முன்வந்துள்ள சீனா!
- 'நண்பனின் மனைவி துடித்த அந்த காட்சி'...'தம்பி உன் மனசு இருக்கே'... 'ஆசை ஆசையாக வாங்கிய 22 லட்ச ரூபாய் காரை விற்ற இளைஞர்'... நெகிழ வைத்துள்ள சம்பவம்!