ராஜஸ்தான் மாநில மருத்துவமனையில் நோயாளியை மருத்துவர் ஒருவர் அடித்து உதைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அறுவை செய்யும்போது அணியும் மாஸ்க் அணிந்த மருத்துவர் ஒருவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளியை சரமாரியாக அடித்து உதைக்கிறார். அந்த நோயாளியைத் தள்ளிவிட்டு மருத்துவமனை கட்டில் மீது ஏறி அந்த மருத்துவர் அவரைத் தொடர்ந்து அடிக்கிறார். மற்ற நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் அதைப் பார்த்துக் கொண்டே சுற்றி நிற்கின்றனர். கடைசியாக ஒரு மருத்துவர் வந்து அடிப்பவரைத் தடுத்து கூட்டிப் போகிறார்.
இதை அங்குள்ள ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுபற்றி முறையாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது. அந்த வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்த சீனியர்கள்’, விபரீத முடிவு எடுத்த டாக்டர்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
- “என்னோட திறமையை காட்டத்தான் அப்படி செஞ்சேன்”!.. ‘நோயாளிகளுக்கு விஷம் கொடுத்த டாக்டர் அதிர்ச்சி தகவல்’!
- 'வைத்தியம் பாக்க தானே'...'என் பொண்ணு போச்சு'...'இளம் டாக்டர்'க்கு நிகழ்ந்த பரிதாபம்!
- நோயாளியின் வயிற்றில் '116 இரும்பு ஆணிகள்.. இன்னும் லிஸ்ட் இருக்கு'.. ஷாக் ஆன மருத்துவர்கள்!
- 'வார விடுமுறையில் மருத்துவராக மாறிவிடுவேன்'... பிரதமர் சொல்லும் அதிசய காரணம்!
- '1 கி.மீ-க்கு பின்னோக்கி இயக்கப்பட்ட ரயில்’.. டிரைவரின் அசாத்திய செயலுக்கு காரணம் இதுதான்!
- 'பேசாமல் போன காதலி'...'காதலியின் 'மூக்கை கடித்து குதறிய'...காதலனின் வெறிச் செயல்!
- ‘சென்னையில மட்டும் இல்ல.. ஜெய்ப்பூரிலும் கிங்குதான்’.. ‘தோனி.. தோனி..’ காதைக் கிழித்த ரசிகர்களின் ஆரவாரம்!
- ‘வாக்களிப்பதை வலியுறுத்தி’ இந்த டாக்டர் செய்யும் வைரல் காரியம்.. அதுமட்டுமில்ல..!
- ‘மெர்சல் பட பாணியில் 2 ரூபாய் டாக்டர்’.. இறப்புக்கு பின் தொடரும் நெகிழ்ச்சிகரமான சம்பவம்!