VIDEO : “மேலாடையை உருவி... அடித்து, உதைத்து...” அரசு மருத்துவரை ஆட்டோவில் ஏற்றிய போலீசார்... பதற வைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருத்துவர் ஒருவரை போலீசார் சிலர் கைகளை கட்டி தாக்கிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் சுதாகர், இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் N 95 மாஸ்க்குகள் தட்டுப்பாடாகவுள்ளது என குற்றம் சுமத்தி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில், இன்று விசாகப்பட்டினம் பகுதியில் சாலையோரத்தில் மருத்துவர் சுதாகரை மேல் சட்டையின்றி கைகளை கட்டி வைத்து சில போலீசார் தாக்கியுள்ளதாக தெரிகிறது. மக்கள் அதிகம் கூட ஆரம்பித்த நிலையில் மருத்துவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த வீடியோ இணையத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஆர்.கே. மீனா கூறுகையில், 'மருத்துவர் சுதாகர் மது போதையில் இருந்த நிலையில் அங்கிருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதே போல கான்ஸ்டபிள் ஒருவரின் செல்போனை பிடுங்கி வீசியுள்ளார். அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். சிகிச்சை முடிந்த பின் அவர் மீது வழக்குப்பதிவு செய்வோம். அதே போல, சுதாகரை தாக்கிய கான்ஸ்டபிள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்' என தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்