'50 மணி நேரம்...' '2,500 கிலோமீட்டர்...' '5 மாநிலங்களைக் கடந்து...' ஆச்சரியமூட்டும் 'சாகசப் பயணம்...' 'மகளை' மீட்ட 'தந்தையின்' பாசப் 'போராட்டம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் சூழலிலும், தனது மகளை காப்பாற்ற மருத்துவர் ஒருவர் மேற்கொண்ட சாகச பயணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் போகராவைச் சேர்ந்த 49 வயதாகும் மருத்துவர் ஒருவரின் 18 வயது மகள், ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வந்தன. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் ராஜஸ்தானில் படித்து வரும் தனது மகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என நினைத்த மருத்துவர், அவளை எப்படியாவது பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு விட்டதால் சாலை வழியாகத் தான் மகளை அழைத்து வர வேண்டும். பேருந்து சேவைகளும் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் தனது காரிலேயே சென்று மகளை அழைத்துவர திட்டமிட்டார்.
கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதேநாளில் தனது மகளை அழைத்து வர காரில் கிளம்பியுள்ளார். 50 மணி நேரத்தில் சுமார் 2,500 கி.மீ தூரம் பயணித்து தனது மகளை மீட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.அதாவது 5 மாநிலங்களைக் கடந்து சென்று ஆச்சரியமூட்டும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதுபற்றி அந்த பெண் கூறுகையில், எனது தந்தை ஒரு 'சூப்பர் டாட்' என பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், வழியாக ராஜஸ்தான் சென்ற மருத்துவர், இது தன் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னைக்கு போய்ட்டு தான் வரோம்'... 'கொரோனா டெஸ்ட்க்கு வர முடியாது'...'பதறி போன பொதுமக்கள்!
- ‘ஊரடங்கு உத்தரவு எதிரொலி’.. பால் விற்கும் நேரத்தில் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
- 'ஸ்பெயின் மக்களை கதறவைக்கும் கொரோனா!'... அழுகுரல் ஓய்வதற்குள்... அடுத்த சிக்கல்!
- ‘கொரோனா’ பாதிப்பில்... ‘2வது’ இடத்திலிருந்து ‘9வது’ இடம்... உதவிய ‘மெர்ஸ்’ பாதிப்பு அனுபவம்... ‘தென்கொரியா’ கட்டுப்படுத்தியது ‘எப்படி?’...
- ‘முட்டை, பால், பழரசம், சாத்துக்குடி ஜூஸ்’.. கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் ‘மெனு லிஸ்ட்’!
- '3 நாட்களுக்கு முன்பு 341...' இப்போது, '606 ஆக' உயர்வு.... இந்தியாவில் 'காட்டுத் தீ' வேகத்தில் பரவும் 'கொரோனா...' விரைவில் 'சமூகத் தொற்றாக' மாறும் 'அபாயம்'...
- 'கொரோனா நோயாளிகளுக்கு உதவ களத்தில் இறங்கிய ரயில்வே!'... இந்த திட்டம் சாத்தியமா?... மத்திய அரசு பரிசீலனை!
- ‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..!
- 'வல்லரசு' நாட்டை 'வறுத்தெடுக்கும்' 'கொரோனா'... 'அமெரிக்காவில்' ஒரே நாளில் '247 பேர்' பலி... உயிரிழப்பு '1000-ஐ கடந்தது'... நேற்று மட்டும் '13,347' பேருக்கு 'பாதிப்பு'...
- 'ரணகளத்திலும் ஒரு ஆறுதல்...' 'இத்தாலியும் தன்னை நிரூபித்தது...' 'கொரோனா' இல்லாத 'நகரை' உருவாக்கி 'சாதனை'...