படிச்சு முன்னேற காரணமா இருந்த அரசு கல்லூரிக்கு மொத்த சொத்தையும் எழுதி வச்ச டாக்டர்.. நெகிழ வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தான் படித்த அரசு மருத்துவ கல்லூரிக்கு தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தனமாக வழங்கியுள்ளார் மருத்துவர் ஒருவர். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | எதே 3 ஏர்போர்ட்டா..? ஊராட்சி மன்ற தேர்தல் வேட்பளாரின் நூதன வாக்குறுதிகள்.. List-அ கேட்டாவே திக்குன்னு இருக்கே.. யாரு சாமி இவரு..?

பொதுவாக நாம் படித்த பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது எப்போதும் ஒரு அன்பை தேக்கி வைத்திருப்போம். படித்த கல்வி நிலையங்களுக்கு உதவி செய்யவும் பலர் தயங்குவதில்லை. ஆனால், அமெரிக்காவில் வசித்துவரும் மருத்துவர் ஒருவர் தன்னுடைய மொத்த சொத்தையும் தான் படித்த கல்லூரிக்கு எழுதிக்கொடுத்திருக்கிறார். இது முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

படிப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூரை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர். உமா தேவி கவினி. இவர் கடந்த 1965 ஆம் ஆண்டு குண்டூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்திருக்கிறார். அதன்பிறகு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற உமா தேவி, அங்கேயே பணியில் சேர்ந்து செட்டிலாகிவிட்டார். இவர் டாக்டர். கனூரி ராமச்சந்திர ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்துவந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய கணவர் டாக்டர். கனூரி ராமச்சந்திர ராவ் மரணமடைந்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அங்கே இம்யூனாலஜி நிபுணராகவும், ஒவ்வாமை நிபுணராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.

20 கோடி ரூபாய்

இந்நிலையில், குண்டூர் மருத்துவக் கல்லூரியின் 17வது ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் ரீயூனியன் கூட்டம் (Guntur Medical College Alumni Association, North America- GMCANA) அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்றது. இதில் குண்டூர் அரசு மருத்துவ கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய டாக்டர். உமா தேவி தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அளிப்பதாக அறிவித்தார். இதனால் கூடியிருந்த முன்னாள் மாணவர்கள் நெகிழ்ந்துபோயினர்.

உமா தேவி கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். அப்போது, கட்டப்பட இருக்கும் தாய் - சேய் மருத்துவமனைக்கு அவருடைய பெயரை வைக்க உறுப்பினர்கள் பரிந்துரை செய்த போதிலும், அதனை ஏற்காத உமா தேவி தனது கணவருடைய பெயரை அந்த மருத்துவமனைக்கு வைக்க ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் அவருடைய பரந்த உள்ளத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | "விண்வெளில மாட்டிகிட்டேன்.. வந்த உடனே கல்யாணம்".. உலக உருண்டை சைஸில் உருட்டிய இளைஞர்.. அதையும் நம்பிய அப்பாவி காதலிக்கு நேர்ந்த கதி..!

ANDHRA PRADESH, DOCTOR, DONATES, GUNTUR GH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்