"அண்ணா, அங்கிள்னு கூப்பிடாதீங்க".. டிரைவர் சீட்டில் இருந்த வாசகம்.. "இனி இதை Follow பண்ணுங்க".. நிறுவனம் போட்ட நச் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைன் வாடகை டாக்சி நிறுவனமான ஊபர் வாடிக்கையாளர் ஒருவருடைய கேள்விக்கு போட்ட கமெண்ட் பலரையும் ஈர்த்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | முதல் தடவையா ஒரு டாக்டர் கையெழுத்து புரியுது.. வைரலாகும் மருந்து சீட்டின் புகைப்படம்.. டாக்டர் சொல்லிய சூப்பர் தகவல்..!

டாக்சி

இந்தியாவில் போக்குவரத்தின் தேவை எப்போதுமே மிக அதிகம். மக்களின் தேவைகளுக்காக பொது போக்குவரத்து சேவைகளை அரசுகள் மேம்படுத்தி வந்தாலும், சொந்தமாக வாகனங்கள் வாங்குவதை மக்கள் விரும்பி செய்துவந்தனர். இருப்பினும் வாடகை டாக்சிக்களுக்கான தேவை தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. இதுவே ஆன்லைன் வாடகை டாக்சி நிறுவனங்களின் வருகைக்கும் வழிவகுத்தது என்றே சொல்லவேண்டும். ஆப் மூலமாகவே நாம் பயணிக்க இருக்கும் இடம், அதற்கான கட்டணம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக மும்பை போன்ற பெரு நகரங்களில் இந்த வசதி மக்களுக்கு பெரும் உதவியாகவே இருந்துவருகிறது.

அண்ணா, அங்கிள்

இந்நிலையில் ஊபர் டாக்சி ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய இருக்கைக்கு பின்புறத்தில் யாரும் என்னை அண்ணா என்றோ அங்கிள் என்றோ அழைக்கவேண்டாம் என எழுதியிருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை சோஹினி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் சிரிக்கும் எமோஜிக்களுடன் ஊபர் நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார் அவர்.

இந்த புகைப்படம் இணையத்தில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து, பலரும் இதுகுறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவில் ஒருவர்,"நான் எப்போதும் என்னுடைய டிரைவரை பாஸ் என்று தான் அழைப்பேன். அதையே நீங்களும் பின்பற்றுங்கள்" என கூற அதற்கு பதில் அளித்திருந்த சோஹினி,"அது நாகரிகமாக இருக்காது" எனக் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர் இந்த பதிவில்,"டிரைவரை பெயர் சொல்லி அழையுங்கள். சிக்கல் இருக்காது" என ஆலோசனை கூறியிருந்தார்.

அவருடைய கமென்டிற்கு பதில் கூறியிருக்கும் சோஹினி,"மும்பையில் பெரும்பாலான டாக்சி டிரைவர்கள் வயதானவர்களாக இருக்கிறார்கள். அவர்களை பெயர் சொல்லி அழைப்பது தர்ம சங்கடமாக இருக்கும்" என குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் ஒருவர் அந்த பதிவில்,"ஒருவேளை அந்த டிரைவர் பெண்ணாக இருப்பாரோ?" எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஊபர் நிறுவனம் போட்ட கமெண்ட்

இந்நிலையில், ஊபர் நிறுவனமே சோஹினியின் பதிவில் கமெண்ட் செய்திருக்கிறது. அதில்,"டிரைவரை எப்படி அழைப்பது என குழப்பம் ஏற்படும் பட்சத்தில் அப்ளிகேஷனில் அவருடைய பெயரை தெரிந்துகொண்டு அப்படியே அழையுங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | வெளில பாக்கத்தான் சாக்லேட் & சட்டை... உள்ளே இருந்த சங்கதியே வேற.. ஆடிப்போன ஏர்போர்ட் அதிகாரிகள்.. திணற வைக்கும் வீடியோ..!

CAB BOOKING, UBER DRIVER, CAR SEAT, DO NOT CALL ME BHAYA AND UNCLE, NOTICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்