'அவர் என்ன செஞ்சாரு தெரியுமா'... 'அடிக்கடி வரும் மொட்டை கடிதங்கள்'... வெளியான அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊழல் புகார் கூறும் மொட்டை கடிதங்கள் குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து அவ்வப்போது பெயர், ஊர் எதுவும் இன்றி, மொட்டை கடிதம் மூலம் ஊழல் புகார்கள் தெரிவிக்கப்படுவது வழக்கம். அதில் சிலர் தங்களது சொந்த விருப்பு, வெறுப்புகளை அதில் காட்டும் விதமாக அதுபோன்ற கடிதங்களை எழுதிப் போடுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில் மொட்டை கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் ஊழல் புகார்களை அடிப்படையாக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அனைத்து அரசுத்துறைகளுக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவை மீறி மொட்டை கடிதம் அடிப்படையில் சில அரசுத்துறைகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிய வந்தது. இந்த நிலையில், தங்கள் உத்தரவை மீறி, மொட்டை கடிதத்தில் கூறப்படும் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதைக் கடுமையாக அணுகுவோம் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மற்ற செய்திகள்