'தமிழகத்தில் முன்னணி பெறும் திமுக கூட்டணி'... 'அறிவாலயத்தில்' குவிந்த தொண்டர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுவது இந்திய நாடாளுமன்ற தேர்தலாகும். இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.இதில் தமிழகத்தை பொறுத்தவரை வேலூர் தொகுதி நீங்கலாக,38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
அதோடு ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.இதையடுத்து நாடு முழுவதும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நேரத்தில் தமிழகத்தின் முக்கியமான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக நட்சத்திர வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.இதையடுத்து சென்னையில் உள்ள திமுக தலைமை கழகமான அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாக்கு எண்ணிக்கை தினம் என்பதால் தாய் நாட்டுக்காக ப்ரே பண்ணிக்கிறேன்!’.. மம்தா!
- 'அடுத்த பிரதமர் யார்'?... தயாரான 'வாக்கு எண்ணும் மையங்கள்'... '3 அடுக்கு பாதுகாப்பு'!
- 'காலை 8.30 மணிக்கெல்லாம் முதல்கட்ட ரிசல்ட்’.. தேர்தல் முடிவுகளை இந்த ஆப்பில் பார்க்கலாம்!
- 'உலகத்திலேயே இதுதான் முதல்முறை’.. ஆர்வம் காட்டிய மக்களால் அசத்திய தேர்தல் ஆணையம்!
- ‘எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்களும் நம்பிக்கையோடு இருங்க’!.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தியின் பதில்!
- ‘எனக்கு ஜனநாயக கடமைதான் முக்கியம்’!.. தனது மோசமான உடல்நிலையிலும் வாக்களிக்க வந்த பெண்!
- என்னது 143% வாக்குப் பதிவா..? உலகின் உயரமான வாக்குச்சாவடியில் நடந்த விநோதம்..!
- 'ஓ.பி.எஸ். மகனைப் போல் தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன மற்றொரு வேட்பாளர்'!
- “சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டும் இவ்வளவு செலவா”?.. எந்த கட்சி டாப் தெரியுமா?
- 'முதன் முதலாக வாக்களித்ததால்' வைரலாகும் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்!