"நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. இப்பவே டென்ஷன் ஆனா எப்படி" - திமுக MLA TRB ராஜாவால் அனல் பறக்கும் டிவிட்டர் களம்
முகப்பு > செய்திகள் > இந்தியாசென்னை: குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகள் புறக்கணிப்பு செய்யப்பட்ட பின் டிவிட்டர் களம் பாஜக vs திமுக என்றாகி உள்ளது.
திமுக கட்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பதவியை சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்துவிட்டார். இதற்கு IT Wing ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரனை கொண்டு வந்ததும், மக்கள் நீதி மையத்தில் இருந்து திமுக வந்த கோவை மகேந்திரனை இணைச் செயலாளராக கொண்டு வந்தது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அறிவாலயத்தின் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இதை அறிவாலயம் தரப்பு மறுத்து அரசாங்க வேலைகளில் கவனம் செலுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்ததாக கூறினர்.
பின் திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, துரைமுருகனால் நியமிக்கப்பட்டார். டிஆர்பி ராஜாவின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தளிக்கோட்டை ராஜூத்தேவர் பாலுவுக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் ஏற்கனவே பனிப்போர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, ராஜா நேரடியாக சந்தித்து வாழ்த்து ஆசி பெற்றார்.
பதவியேற்று இரு வாரம் ஆகிய நிலையில் டிவிட்டரில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தருவதில் ராஜா மும்முரமாக ஈடுபட்டுள்ளார். "பொறுங்கப்பு ! நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, இப்பவே டென்ஷன் ஆனா எப்படி! புதிய பொறுப்பு வந்தவுடன் "am a decent boy" make up போட்டுண்டு அமைதியா இருப்பேன்னு நினைத்தீர்களா? Sorry da basically I just love bashing #dravidam haters, உங்கள் வயிற்றெரிச்சல் எங்கள் பெருமை #திமுக டா" என டிவீட் செய்துள்ளார். இந்த டிவீட்டிற்கு பின்னணி காரணம் என்ன என டிவிட்டரில் உலாவிய பொழுது குடியரசு தின அணிவகுப்பு முக்கிய காரணமாக இருந்ததை அறிய முடிந்தது.
கர்நாடக மாநிலம் சார்பாக பங்கேற்ற ஊர்தியில் உள்ள காமதேனு உருவத்தை, இது எந்த சுதந்திர போராட்ட வீரர் என ராஜா கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த பாஜகவினர், காம தேனு உருவம் உள்ள வாகனம் 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பங்கேற்ற வாகனம் என ஆதாரங்களுடன் எடுத்து வைத்துள்ளனர். இதற்கு பதிலடியாக மேற்கண்ட டிவீட்டை ராஜா போட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஹனிமூன் பீரியட் முடிந்தது! அக்னி பரிட்சைக்கு தயாரான ஸ்டாலின்.. அதிகாரிகளின் மீது கடுப்பில் முதல்வர்
- இதுதான் மாஸ்டர் ஸ்டோக்.. சென்னை மேயர் விவகாரத்தில் திமுக நிகழ்த்திய அதிரடி
- பெரு முதலாளிகளின் இடத்தில் கை வைக்குமா அரசு? - ஏழைகளின் வீடு ஆக்கிரமிப்பா? - சீமான் கேள்வி
- ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற வானதி சீனிவாசன்.. கையோடு வைத்த வேண்டுகோள்
- பிரதமரை விமர்சித்து நிகழ்ச்சி... தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- குடியரசு தின விழா.. மத்திய அரசு நிராகரித்த தமிழக அலங்கார ஊர்தி.. தமிழக முதல்வர் எடுத்த அசத்தல் முடிவு
- "தமிழ் டிவி நிகழ்ச்சியில பிரதமரை கேலி செஞ்சுட்டாங்க!".. அடுத்து செய்யப்போவது என்ன? அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!!
- முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்- நீதிமன்றம் உத்தரவு
- அரசு வேலை.. 5 லட்சம் கொடு .. அமைச்சர்களுக்கும் பங்கு தரணும்! வீடியோவில் சிக்கிய திமுக நகர செயலாளர்
- VIDEO: முதல்வர் முன்னால் ‘சண்டை’ போட்ட அமைச்சர், எம்பி.. ஓடி வந்து தடுத்த போலீசார்.. பரபரப்பு வீடியோ..!