'தீபாவளிக்கு மட்டும் இத்தன கோடி விற்பனையா?!!'... 'ஆனா அங்கதான் டிவிஸ்ட்டே!!!'... 'சீனாவுக்கு பெரிய ஷாக்காக கொடுத்த இந்திய மக்கள்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ 72 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
முன்னதாக சீன வீரர்கள் கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது நம் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தபோது, சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற உந்துதலையும் இந்திய மக்களிடம் ஏற்படுத்தியது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்ததன் தாக்கம் தீபாவளி பண்டிகை காலத்தில் எதிரொலித்துள்ளது.
அதாவது இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ 72 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஆனால் அதேசமயம் சீன பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் சீனாவுக்கு ரூ 40 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது. சிஏஐடி தனது ஆய்வுகளுக்காக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, நொய்டா, கொச்சின் உள்பட 20 முக்கிய நகரங்களை விநியோக நகரங்களாக எடுத்துக்கொண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன் பின்னர் அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீன பொருட்கள் புறக்கணிப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை காலத்தில் 20 விநியோக நகரங்களில் நுகர்வோர் சாதனங்கள், தங்க நகைகள், காலணிகள் என அனைத்து விதமான பொருட்களும் மொத்தமாக சுமார் ரூ 72 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. அதே சமயம் சீன பொருட்களை மக்களும், வர்த்தகர்களும் புறக்கணித்ததால் சீன பொருட்கள் விற்பனை அடியோடு முடங்கியுள்ளது. இதனால் சீனாவுக்கு இந்த பண்டிகை காலத்தில் மட்டும் ரூ 40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே வர்த்தகர்களும், பொதுமக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என சிஏஐடி கோரிக்கை விடுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய (15-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-V' தடுப்பூசி இந்தியா வந்தாச்சு...! இந்தியால மொதல்ல எங்க வச்சு சோதனை...? - 180 பேர வச்சு டெஸ்ட்...!
- இதுக்கு ஒரு முடிவே இல்லையா...! 'அந்த 2 வகையான இறைச்சில கொரோனா பரவுது...' - அடுத்த குண்டை தூக்கி போட்ட சீனா...!
- ‘இந்தியா இதெல்லாத்தையும் மோட்டிவேட் பண்ணுது’... ‘அதற்கான எவிடென்ஸ் எங்ககிட்ட இருக்கு’... ‘மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்’...!!!
- ‘தீபாவளிக்கு தடையை மீறி’... ‘பொதுமக்கள் செய்த காரியம்’... ‘மோசமடைந்த நகரங்கள்’... ‘செய்வதறியாது தவிக்கும் மாநில அரசு’...!!!
- "வீட்ட 'க்ளீன்' பண்றப்போ... இப்டியா 'careless'அ இருக்குறது??..." குப்பையில் விழுந்த தங்க 'நகை'... அடுத்தடுத்து நடந்த 'ட்விஸ்ட்'!!!
- 'பட்டாசு சத்தம் கேட்டாலே நாய்கள் அலறும்... 'இங்க' மட்டும் ரொம்ப ஸ்பெஷலா இருக்கு!'.. இப்படி ஒரு தீபாவளியா?.. என்ன காரணம்?.. வியப்பூட்டும் தகவல்!
- 'எவ்வளவு நம்பிக்கையா இருந்தோம்'?...' எங்க மொத்த உழைப்பும் வீணா போச்சு!'.. கடும் வேதனையில் உற்பத்தியாளர்கள்!.. தீர்வு தான் என்ன?
- "ஒரே ஒரு 'வீடியோ' தான் 'upload' பண்ணாரு..." கோலியை மொத்தமா வெச்சு செஞ்ச 'ரசிகர்'கள்,,. நடந்தது என்ன??
- 'அவங்க எப்படி இத பண்ணலாம்?'.. ரஷ்யா, வடகொரியாவை... கடுமையாக சாடிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!