'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு'...'ராமர் கோவில் கட்டலாம்'...வெளியானது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இன்று ஒன்றாக வழங்கும் என தெரிவித்தார். இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பை காலை 10.30 மணிக்கு வாசிக்க ஆரம்பித்தார். அவர் தன்னுடைய தீர்ப்பில், மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. இறை நம்பிக்கைக்குள் செல்ல நீதிமன்றம் விரும்பவில்லை. அதேபோன்று தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. மேலும் மசூதிக்கு கீழ் இருந்தது எந்த வழிபாட்டுத்தலம் என்பதை தொல்லியியல் துறை குறிப்பிட்டு சொல்லவில்லை.

அயோத்தி வழக்கில் நடுநிலைமை காக்கப்படும் என கூறிய ரஞ்சன் கோகாய், எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது என தெரிவித்தார். அதோடு நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது. சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர்.

ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய இடம் அரசுக்கு சொந்தமானது, இந்துக்களின் மத நம்பிக்கை குறித்து விவாதமே பண்ண முடியாது. அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது. மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

அதே நேரத்தில் அலகாபாத் நீதிமன்றம், அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து கொடுத்தது தவறு என்றும் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

AYODHYA JUDGMENT, SUPREME COURT, MOSQUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்