"இந்த 5 இந்திய படங்களையும் பாருங்க".. அமெரிக்காவில் பகிர்ந்த ராஜமௌலி .. List-ல வெற்றிமாறன் படமும் இருக்கு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இயக்குனர் ராஜமௌலி பிரபல அமெரிக்க இதழுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

"இந்த 5 இந்திய படங்களையும் பாருங்க".. அமெரிக்காவில் பகிர்ந்த ராஜமௌலி .. List-ல வெற்றிமாறன் படமும் இருக்கு..!
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நானே செஞ்சேன்.. நல்லா இல்லைன்னா..".. கொரோனா பாதித்த அம்மாவுக்கு டிபன் பாக்ஸ் அனுப்பிய சிறுவன்.. கூடவே கலங்கடிக்கும் கடிதம்..!

ராஜமௌலியின் மூன்று படங்களான பாகுபலி (2015), பாகுபலி- 2 (2017), மற்றும் ஆர்ஆர்ஆர் (2022) ஆகியவை இன்று வரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த மூன்று படங்களுமே அவை வெளியான நேரத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியப் படங்கள்.

மூன்று தேசிய திரைப்பட  விருதுகளை பெற்ற ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து Sye, சத்ரபதி , மகதீரா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ராஜமௌலி பாகுபலி முதல் இரண்டு படங்களையும் இயக்கியிருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ரிலீசான படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவானது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்தனர். இந்நிலையில், தற்போது பிரபல அமெரிக்க இதழ் ஒன்றுக்கு ராஜமௌலி பேட்டி அளித்திருந்தார். அப்போது தன்னுடைய திரைப்பட பயணம் குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பேட்டியின்போது அமெரிக்க வாசகர்களுக்காக சிறந்த 5 இந்திய படங்களை பட்டியலிடுமாறு ராஜமவுலியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்,"சங்கராபரணம், முன்னா பாய் எம்.பி.பி.எஸ், பண்டித் ஃகுயீன், ப்ளாக் ப்ரைடே, ஆடுகளம்" ஆகிய படங்களை பட்டியலிட்டிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ஆடுகளம். இதில் டாப்ஸி, கிஷோர், விஐஎஸ் ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் 6 தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | என்ன சூட்கேஸ் வெயிட்டா இருக்கு?.. அதிகாரிகளுக்கு வந்த டவுட்.. அடுத்த நிமிடமே ஷாக்.. வீடியோ

SS RAJAMOULI, VETRIMAARAN, INDIAN FILMS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்