பேச்சு மற்றும் செவி மாற்றுத்திறனாளி தம்பதியின் எளிமையான பானிபூரி கடை.. இதயத்தை லேசாக்கும் வீடியோ.. ஹார்டின்களை பறக்கவிட்ட நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகராஷ்டிரா மாநிலத்தில் பேச்சு மற்றும் செவி மாற்றுத் திறனாளி தம்பதியர் பானிபூரி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறும் அவர்களது வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சமர்பித்தது ஆறுமுகசாமி ஆணையம்.. முழுவிவரம்..!

இந்தியா முழுவதும் அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரமாய் கிடைக்கும் உணவு என்றால், கண்ணை கட்டிக்கொண்டு பானிபூரியை கையை காட்டிவிடலாம். மசித்து அரைக்கப்பட்ட உருளைக்கிழங்கில் மசாலா சேர்த்து, பின்னர் அதனை குட்டி குட்டி பூரிக்குள் லாவகமாக திணித்து, புதினாவும் இன்னபிற சங்கதிகளும் சேர்த்த சாறை,அதன் உள்ளே நிறைத்து சாப்பிட யாருக்குத்தான் ஆசை இருக்காது?. சொல்லப்போனால் சமீப ஆண்டுகளில் பானிபூரி கடைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. காரணம், சந்தேகமே இல்லாமல் அதன் ருசி தான்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பேச்சு மற்றும் செவி மாற்றுத் திறனாளி தம்பதியர் பானிபூரி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இங்குவரும் வாடிக்கையாளர்களுக்கு பார்த்து பார்த்து பானிபூரியை அவர்கள் பரிமாறும் வீடியோ நெட்டிசன்கள் கவனத்தை பெருமளவில் ஈர்த்திருக்கிறது. அந்த வீடியோவில் தாங்கள் வீட்டிலேயே பனிபூரிகள் மற்றும் பிற பொருட்களை தயாரித்து எடுத்து வருவதாகவும் அவர்கள் சைகை மூலமாக வெளிப்படுத்துகின்றனர்.

மேலும், பானிபூரியை தயாரிக்கும் போதே, அதில் காரம் எப்படி இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டு அதற்கு தகுந்தபடி செய்கிறார் அந்த பெண்மணி. மேலும்  வாடிக்கையாளர்களின் முக பாவத்தை வைத்தே அவர்களின் விருப்பத்தையும் புரிந்துகொள்கிறார்கள் இந்த தம்பதியர்.

இந்த வீடியோவை இதுவரையில் 3.7 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும், இந்த பதிவில் நெட்டிசன்கள்,"இவர்களின் முயற்சியை பாராட்டவாவது இந்த கடைக்கு அனைவரும் சென்று சாப்பிட வேண்டும் எனத் தோன்றுகிறது" என்றும் "கடவுள் இவர்களது முயற்சிக்கு பக்கபலமாய் இருக்கட்டும்" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read | ஒரு கையில கேட்ச்.. MATCH-யே மாத்துன தருணம்.. கோலியை பாராட்டி அனுஷ்கா ஷர்மா போட்ட கியூட்டான போஸ்ட்..!

DIFFERENTLY ABLED COUPLE, PANI PURI STALL, NASHIK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்