'எழுந்து நிக்க மாட்டீங்க?'.. 'எதுக்கு படம் பாக்க வர்றீங்க?'.. அசுரன் பட திரையரங்கில் இருந்து பெண்கள் உட்பட 4 இளைஞர்கள் வெளியேற்றம்! பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரில் அசுரன் திரைப்படம் பார்க்கச் சென்ற பெண்கள் உட்பட 4 இளைஞர்கள் திரையரங்கில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காததால் வெளியேற்றப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தின் தனுஷ், மஞ்சுவாரியர் நடித்த அசுரன் திரைப்படம் பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் உள்ள ஓரியன் மால் திரையரங்கத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு வருகை தந்த பலரும், படம் தொடங்குவதற்கு முன்பாக அரங்கில் ஒளிபரப்பப் பட்ட தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றனர். 

ஆனால் அப்படத்தைக் காண்பதற்கு வந்த 2 இளம் பெண்களும் 2 இளம் ஆண்களும் என 4 இளைஞர்கள் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கவில்லை. இதனை திரையரங்கினுள் இருந்த கன்னட நடிகர் அரு கவுடா வீடியோ எடுத்ததோடு, பின்னர் தன்னுடன் வந்திருந்த நடிகை ஐஸ்வர்யாவை உடன் அழைத்துச் சென்று அந்த இளைஞர்களிடம்,  ‘தேசிய கீதத்தின்போது ஏன் எழுந்து நிற்கவில்லை’ என்று மல்லுக்கட்டத் தொடங்கினார்.

மேலும் அந்த இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்த அந்த நடிகர்கள் இருவரும், ‘52 விநாடிகள் ஒளிக்கும் தேசிய கீதத்துக்கு எழுந்து மரியாதை செலுத்தாமல், 3 மணி நேரம் ஓடும் படத்தைப் பார்ப்பதற்கு நீங்கள் எப்படி வரலாம்?’ என்று கேள்வி கேட்டு கொந்தளித்தனர். இதனால் இருதரப்பினரிடையே வார்த்தைப் போர் மூண்டது.

இறுதியில், தேசிய கீதத்துக்கு எழுந்த நிற்காததால் அந்த  2 இளம் பெண்கள் உட்பட 4 பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

MOVIE, BENGALURU, THEATRE, NATIONALANTHEM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்