சீன பொருட்கள் வேண்டாம்யா.. 'மேட் இன் இந்தியா' கொடுங்க.. சீனாவிற்கு போகவேண்டிய ஆர்டர்கள் இந்தியா பக்கம் திரும்புவது ஏன்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உலக மக்கள் அதிகளவில் வாங்க விரும்புவதாக டி.ஜி.எஃப்.டி அமைப்பு கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

இன்றைய சூழலை பொறுத்தவரை இந்தியாவில் விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் முதல் எஃப்.எம்.சி.ஜி பொருட்கள் வரை எல்லாவற்றிற்கும் வெளிநாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது.

மேட் இன் இந்தியா:

'மேட் இன் இந்தியா' என குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களை வெளிநாட்டு மக்கள் இப்போது விரும்பி வாங்க ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டுதான், சமீபத்தில் கூட தமிழகத்தில் இருந்து அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

301.08 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி:

அதில், 'மேட் இன் இந்தியா' என்பது போல, 'மேட் இன் தமிழ்நாடு' என உருவாக வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழக ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, நடப்பு 2021-2022 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 301.08 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.

அதோடு, நடப்பு நிதி ஆண்டு முடியும் போது சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கும் என இந்திய ஏற்றுமதி கழகம் என கணித்துள்ளது. மேலும், 2022-2023-ம் நிதி ஆண்டில்  500 பில்லியன் டாலர்கள் இந்தியாவின் ஏற்றுமதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புளூபாரத் எக்ஸிம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒருவரான கே.எஸ்.கமாலுதீனிடம் இந்தியாவின் எந்தெந்த பகுதிகளில் ஏற்றுமதி பொருட்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது செய்தியாளர் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது.

இந்த ஏடிஎம்-க்கு எப்போ போனாலும் வொர்க் ஆகாது.. கடுப்புல கஸ்டமர் செய்த காரியம்

எந்தெந்த பகுதிகளில் ஏற்றுமதி பொருட்களுக்கு வாய்ப்புகள் அதிகம்?

இதுக்குறித்து பேசிய அவர், 'டி.ஜி.எஃப்.டி (Directorate General of Foreign Trade) அமைப்பின் கருத்து கணிப்பானது சரியாகவே இருக்கிறது. அதன்படி, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியும் கூட. இன்றைய நிலையில் இந்தியப் பொருட்களுக்கு உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் இந்தியப்பொருட்கள் விற்பனை ஆவதற்கு இந்தியா தயாரிக்கும் பொருட்களின் தரம் அதற்கு ஒரு காரணம் என்றாலும், ஏற்றுமதியில் இதுவரை சிறந்து விளங்கிய சீனப் பொருட்களின் மீது வெளிநாட்டு மக்களுக்கு எற்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தன்மையும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனாலேயே, சீனாவுக்கு கிடைக்க வேண்டிய ஏற்றுமதி வாய்ப்புகளில் பெரும்பாலான ஆர்டர்கள் இந்தியாவுக்கு கிடைக்கிறது.

இரவானால் எல்லையைத் தாண்டும் இளசுகள்.. தமிழ் கிளப் ஹவுஸ்களில் என்ன நடக்கிறது?

இந்திய ஸ்டேஷனரீஸ் பொருட்களுக்கு இன்று கிராக்கி:

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பேனா, பென்சில் மாதிரியான இந்திய ஸ்டேஷனரீஸ் பொருட்களுக்கு இன்று கிராக்கி அதிகரித்துள்ளது. 'மேட் இன் சீனா' என இருக்கும் பென்சிலை வாங்குவதை விட, 'மேட் இன் இந்தியா' என இருக்கும் பென்சில்களைத்தான் உலக மக்கள் வாங்க ஆசைப்படுகிறார்கள் என்பது தான் நடந்து வருகிறது.

ஒரு சாதாரண பென்சில் விஷயத்தில் இப்படி என்றால், மற்ற பொருட்களுக்கான தேவை மற்றும் வர்த்தகத்தை பற்றி இந்திய ஏற்றுமதியாளர்கள் நன்கு புரிந்துகொண்டு அதன்படி செயல்பட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

DGFT, BUY PRODUCTS MADE IN INDIA, டி.ஜி.எஃப்.டி, மேட் இன் இந்தியா

மற்ற செய்திகள்