‘பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் அபாயம்’... ‘அதனால இந்த லேப்டாப் மட்டும்’... ‘விமானங்களில் எடுத்து செல்ல தடை’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் புரோ மாடல் லேப்டாப்புகளில் குறிப்பிட்ட சில வகைகளில், பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் அயாயம் இருப்பதால், அதனை மட்டும் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 20-ம் தேதி, ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில், 'ஆப்பிள் 15 இன்ச் மேக்புக் ப்ரோ வகை மடிக் கணினிகளில் உள்ள பேட்டரிகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இவை அதிகமாக வெப்பமாகின்றன. இதனால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில், விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் மேக்புக் ப்ரோ மடிக் கணினிகளில் இந்த பிரச்னை எழும்.
எனவே இதுபோன்ற பேட்டரிகளை, வாடிக்கையாளருக்கு நிறுவனம் கட்டணமின்றி மாற்றி வழங்கும். மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் உருவாக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்ட மாடலைத் தவிர, மற்ற லேப்டாப்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றும் அப்போது கூறியிருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘ஆப்பிள் நிறுவனத்தின், மேக் புரோ மாடல்கள் சிலவற்றில், பேட்டரி அதிக சூடாகி, தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணியர், இந்த வகை லேப்டாப்புகளை விமானப் பயணத்தின் போது, எடுத்து வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். லக்கேஜ் பெட்டிக்குள்ளோ அல்லது ஹேண்ட் பேக்குகளிலோ, இந்த மாடல் லேப்டாப்புகளை எடுத்துச் செல்ல, கட்டாயமாக அனுமதி இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
‘அசுர வேகத்தில் வந்த லாரி’.. ‘நொடியில் நடந்த பயங்கர விபத்து’.. ‘16 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்’..
தொடர்புடைய செய்திகள்
- ‘வாட்ஸ்அப்பில்’ புதிதாக வரவுள்ள ஆப்பிளின் ‘ஃபன் ஃபீட்சர்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- ‘இது என்ன புதுசால்ல இருக்கு..!' 'இப்படி எல்லாம் கூடவா வேல கேப்பாங்க..?’
- 18 வருடம் பழசு.. ஆனால் ஐ-பாட் விலையோ ரூ.14 லட்சம்.. இதுதான் காரணம்!
- ‘ஆப் சொல்றத வெச்சி எப்படி கைது பண்லாம்.. எடுங்க ரூ.7 ஆயிரம் கோடி’.. ஆப்பிள் மீது இளைஞர் வழக்கு!
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
- 'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா?
- 'மறுபடியுமா?’.. 2-வது முறையும் மாம்பழத்தை மறந்து ஆப்பிளுக்கு ஓட்டு கேட்ட அமைச்சர்!
- ட்விட்டரின் 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன்... புதிய அறிமுகம் இந்த போனுக்கு மட்டும்தானா?..
- 'லேட்டா பில் கட்டுனாலும்..’ .. அதிரடி வசதிகளால் ட்ரெண்டிங்கில் ஆப்பிள் கிரெடிட் கார்டு!