‘மாஸ்க்' அணிந்துக்கொண்டு பொங்கல் வைத்த பெண்கள்...! கொரோனா வைரஸினால் பலத்த கட்டுப்பாட்டிற்குள் நடந்த பொங்கல் திருவிழா...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுவது திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் பொங்கல் திருவிழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர். இந்த வழக்கத்தின் படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாவது நாளான இன்று முக்கிய விழாவான பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. கோயில் தந்திரி அடுப்பில் தீ வைத்து விழாவை தொடங்கி வைத்தார். கேரளா, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பெண்களும், வெளிநாட்டு பெண்களும் வந்து பொங்கல் வைத்தனர். பக்தர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்குவதற்காக ஆயிரத்து 500 நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் முகக் கவசங்களை அணிந்திருந்தனர். விழா காரணமாக திருவனந்தபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.15 மணிக்கு சிறிய விமானம் மூலம் மலர் தூவி பொங்கல் வழிபாடு நிறைவடைந்தது. விழாவையொட்டி நான்காயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கேரளா அரசு திட்டமிட்டபடி பொங்கல் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்து.
மற்ற செய்திகள்