காணிக்கையாக பொம்மை விமானம்.. குருத்வராவில் குவியும் பக்தர்கள்.. இப்படி ஒரு காரணம் இருக்கா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப்பில் உள்ள குருத்வாராவில் பக்தர்கள், விமான பொம்மைகளை காணிக்கையாக செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

உலகளவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்று குடியேறும் மக்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள் தான். உலக வரைபடத்தில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் இந்தியர்கள் நிறைந்திருக்கிறார்கள். படிப்பை முடித்தவுடன், வெளிநாட்டு வேலைகளுக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நபர்கள் இந்தியாவில் மிக அதிகம். இந்த மக்கள் தாங்கள் செல்லும் நாடுகள் விதித்துள்ள விசா கட்டுப்பாடுகள், பயண இடைஞ்சல்கள் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து அதற்கான ஏற்பாடுகளை மக்கள் செய்வதுண்டு. அப்படி, எவ்வித இடைஞ்சலும் இல்லாமல், வெளிநாட்டு பயணம் அமைய வேண்டும் என வேண்டிக்கொண்டு இந்த குருத்வாராவிற்கு மக்கள் படையெடுக்கின்றனர்.

விமானம்

பஞ்சாபில் உள்ளது தல்ஹான் கிராமம். இங்குள்ள 150 வருட பழமையான ஷஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்திபெற்றது. வெளிநாட்டிற்கு செல்ல இருப்போர், இந்த குருத்வாராவுக்கு சென்று வந்தால் விசா சிக்கல்கள் நீங்கி சுலபமாக பயணம் மேற்கொள்ளலாம் என நம்புகிறார்கள் உள்ளூர் மக்கள்.

இந்த குருத்வாராவுக்கு மத்தியில் மிகப்பெரிய விமான பொம்மை வைக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே உள்ளூர் மக்கள் இதனை 'ஹவாய்ஜஹாஜ்' குருத்வாரா என்று அழைக்கின்றனர். ஹவாய்ஜஹாஜ் என்றால் விமானம் என்று அர்த்தமாம். உள்ளூர் மக்கள், குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள், இங்கு சென்று விமான பொம்மைகளை வாங்கி குருத்வாராவில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

காணிக்கை

இதேபோல், உத்திர பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் பகுதியில் உள்ளது பிரம்மா பாபா கோவில். இங்கு வரும் பக்தர்கள், கடிகாரங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். தங்களது மனதில் நற்காரியத்தை நினைத்துக்கொண்டு இங்குள்ள மரத்தில் கட்டினால், நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். அனைத்து மதத்தினை சேர்ந்தவர்களும் இந்த கோவிலுக்கு சென்றுவருவது இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.

AEROPLANE, GURUDWARA, PUNJAB, விமானம், குருத்வாரா, பஞ்சாப்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்