‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஃபட்னாவிஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் நடந்த பெரிய ட்விஸ்ட்..! அடுத்த முதல்வர் யார்..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

சமீபத்தில் மகாராஷ்டிரா முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தன. இன்று நடைபெற்ற இந்த வழக்கு மீதான விசாரணையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வாக்கெடுப்பை நாளை மாலை 5 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் தெரிவித்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை தேவிந்திர ஃபட்னாவிஸ் திடீரென ராஜினாமா செய்தார். இதனை அடுத்து துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என தெரிகிறது. இந்த நிலையில் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

BJP, MAHARASHTRAPOLITICALDRAMA, MAHARASHTRACM, MAHARASHTRACRISIS, DEVENDRAFADNAVISRESIGNS, SHIVASENA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்