அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ புயல்.. ‘20 ரயில்கள் ரத்து’.. வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 960 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவில் இருந்து சுமார் ஆயிரத்து 1060 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என கூறப்படுகிறது. இந்த புயலுக்கு ‘ஜாவத்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயலானது ஆந்திராவின் வடமேற்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும் இந்த ஜவாத் புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் ஹவுரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் உட்பட 20 ரயில்கள் நாளை (04.12.2021) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜவாத் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்