'8 கோடி ரூபாய் வீடு அப்பு'... 'சந்திரபாபு நாயுடுக்கு வந்த சோதனை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடம், ஆந்திர அரசின் உத்தரவுப்படி இடித்து தள்ளப்பட்டது.

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்படும் எனக் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் 2016-ம் ஆண்டு, தான் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி, அந்த வீட்டில் குடியேறினார். அந்த வீட்டின் அருகில் 5 முதல் 8 கோடி ரூபாய் செலவில் 'பிரஜா வேதிகா' என்ற மற்றொரு புதிய கட்டிடத்தை கட்டினார். அதனை கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் மற்றும் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். 

இந்நிலையில் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அவர், ஏற்கனவே கிருஷ்ணா நதிக்கரையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று கூறினார். அதன்படி, சந்திரபாபு நாயுடுவின் ‘பிரஜா வேதிகா’ கட்டிடம் சட்ட விதிகளை மீறி, நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால், அதை இடிக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து, கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அடுத்ததாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் முன்னாள் மாநில அமைச்சருமான நர லோகேஷ் ஆகியோருக்கு இனி 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு என அதெரிவிக்கப்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

 

CHANDRABABUNAIDU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்