"மகன் போனே எடுக்க மாட்டேங்குறான்".. அவதிப்பட்ட வயதான தம்பதி.. கடவுள் மாதிரி வந்த டெலிவரி ஊழியர்.. நெகிழவைக்கும் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில் நகர பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்வதையே பெரும்பாலும் விரும்புகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | நிறைவேறிய நரிக்குறவர் மக்களின் பலவருட கனவு - முதல்வருடன் தேநீர் சந்திப்பில் நன்றி கூறி நெகிழ்ச்சி.!

நேரடியாக உணவகங்கள் சென்று உணவருந்தும் நேரத்தை விட, வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து விட்டால், குறிப்பிட்ட நேரத்தில் உணவும் வீடு தேடி வந்து விடும்.

இதனால், டெலிவரி ஊழியர்களின் பங்கு, இந்த உணவு டெலிவரி செய்யும் வேளையில் பெரிய பங்காற்றி வருகிறது.

அந்த வகையில், அவ்வப்போது டெலிவரி ஊழியர்கள் தொடர்பாக நிறைய செய்திகள் கூட இணையத்தில் அதிகம் வைரலாகும். அப்படி தற்போது ஒரு உணவு டெலிவரி ஊழியர் குறித்து இணையத்தில் வலம் வரும் செய்தி, நெட்டிசன்கள் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர்வாசி ஒருவர், தனக்கு தெரிந்தவருக்கு நேர்ந்த நிகழ்வு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, சென்னையில் வயதான தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். அவரது மகன் செகந்திராபாத் பகுதியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஒரு சில தினங்களாக மகனின் மொபைலில் தொடர்பு கொள்ள முடியாமல் வயதான தம்பதியினர் அவதிப்பட்டுள்ளனர்.

இதனால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கடும் குழப்பத்திலும் வேதனையிலும் இருந்துள்ளனர். இதன் பின்னர், அவர்களுக்கு தெரிந்த ஒரு பெண், செகந்திராபாத் பகுதியில் அவர்களின் மகன் இருக்கும் முகவரிக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவு டெலிவரி ஊழியர் மூலம் அந்த இளைஞரை தொடர்பு கொள்ள முடியும் என்பதற்காக இப்படி செய்தார். ஆனால், உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியரால் அந்த இளைஞரின் சரியான முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், அந்த உணவை டெலிவரி ஊழியர் எடுத்துக் கொள்ளவும் ஆர்டர் செய்த பெண் கூறி உள்ளார்.

அடுத்த சில மணி நேரம் கழித்து, வயதான முதியவர் உதவியுடன் அந்த பெண்ணுக்கு தனியாக தங்கி வந்த மகனின் சரியான முகவரி கிடைத்துள்ளது. இதனால், தன்னிடம் இருந்த டெலிவரி ஊழியர் எண்ணுக்கு அழைத்து முகவரியை கொடுத்துள்ளார். அடுத்த கொஞ்ச நேரத்தில், அந்த முகவரிக்கு சென்ற டெலிவரி ஊழியர், அந்த வயதான தம்பதியரின் மகனை பார்த்துள்ளார்.

அப்போது அந்த இளைஞருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்களிடம் தெரிவித்தால் அவர்கள் வேதனை அடைவார்கள் என்பதால் தான் அவர்களிடம் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதில் இன்னும் சிறப்பம்சமான விஷயம் என்னவென்றால், டெலிவரி ஊழியரிடம் அருந்தும்படி சொன்ன உணவை அவர் அருந்தாமல், அந்த இளைஞரிடம் கொடுத்து விட்டு திரும்பி உள்ளார். இது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த டெலிவரி ஊழியரின் செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | உலகத்துலயே எந்த குற்றவாளியும் இவ்ளோ ஈஸியா போலீஸ்'ல சிக்கி இருக்க மாட்டான்".. 7 வருசமா சிக்காத வாலிபர்.. "கடைசியில் மாட்டியது எப்படி??"

DELIVERY EXECUTIVE, FOOD DELIVERY MAN, HELPS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்