"விதமா விதமா திருடுறாங்களே!"... "உஷார் மக்களே!!"... "ஆன்லைன் ஷாப்பிங் மோசடி"...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் புது ஃபோன்களுக்கு பதிலாக பழைய ஃபோன்களை விநியோகம் செய்து வந்த டெலிவரி பாய் பிடிபட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம், போபால் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்யும் ஒரு கூரியர் கம்பெனி இயங்கி வருகிறது. அந்த கூரியர் கம்பெனி மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள், பொருட்கள் தரமானதாக இல்லையென்று அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த ஆன்லைன் வணிக நிறுவனம், கூரியர் கம்பெனியை விசாரித்துள்ளது. இது மாதிரியான புகார்கள் அந்த ஆன்லைன் நிறுவனத்திடமும், கூரியர் கம்பெனியிடமும் பல மாதங்களாக தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், அந்த கூரியர் கம்பெனியில் வேலை செய்து வரும் அர்பஸ் அன்சாரி என்ற விநியோக ஊழியர் (டெலிவரி பாய்), ஆர்டர் செய்யப்பட்ட புதிய ஃபோன்களுக்கு மாற்றாக தரமில்லாத போலி ஃபோன்களை விநியோகித்தது தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து, அந்த ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ROBBERY, ONLINE, SHOPPING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்