லேட்டா வந்த Delivery ஊழியர்.. கடுப்புடன் கதவைத் திறந்ததும் கலங்கிப் போன கஸ்டமர்... அடுத்தடுத்து 'ட்விஸ்ட்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில், பலரும் நேரடியாக உணவகங்கள் சென்று, உணவை அருந்தாமல், ஆன்லைன் மூலம் உணவினை ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "அட, நான் தான்பா கரியப்பா, என்ன ஞாபகம் இல்லையா??".. MLA-வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நபர்.. சுவாரஸ்ய பின்னணி

இதன் காரணமாக, பல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில், ஏராளமான ஊழியர்கள் உணவை டெலிவரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படிப்பட்ட உணவு டெலிவரி ஊழியர்கள் தொடர்பாக சில நெகிழ வைக்கும் செய்திகள், இணையத்தில் பரவி அதிகம் வைரலாகும்.

இந்நிலையில், தற்போது அப்படி ஒரு உணவு டெலிவரி செய்யும் ஊழியர் தொடர்பான செய்தி தான், இணையத்தில் வெளியாகி, பலரையும் மனம் உருக வைத்துள்ளது. பெங்களூர் பகுதியை சேர்ந்த ரோஹித் குமார் சிங் என்ற நபர், தனது உணவு டெலிவரி அனுபவம் தொடர்பாக, Linkedin தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சமீபத்தில் ரோஹித் என்ற அந்த நபர், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். மேலும், அரை மணி நேரத்தில் உணவு வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரை மணி நேரம் தாண்டியதுடன் ரோஹித்திற்கு பசி அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இதனால், உணவு டெலிவரி ஊழியரை அவர் அழைத்துள்ளார். ஆனாலும், ஆர்டர் வர தாமதம் ஆனதால், விரக்தியில் இருந்த ரோஹித், மீண்டும் டெலிவரி ஊழியரை அழைத்த நிலையில், அடுத்த 10 நிமிடங்களில் அவரும் வந்துள்ளதாக கூறப்படுகிறிது.

சற்று கோபத்தில் இருந்த ரோஹித், உணவு ஆர்டர் வந்ததும், கதவை திறந்த போது ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போயுள்ளார். காரணம், அந்த டெலிவரி ஊழியர் ஊன்று கோல்கள் உதவியுடன் நின்றது தான். இதனைக் கண்டதும் ஒரு நிமிடம் பேச்சு மூச்சு இல்லாமல் நின்ற ரோஹித், தான் விரக்தியில் இருந்தது ஒரு முட்டாள்தனம் என்றும் கருதி உள்ளார்.

தொடர்ந்து, அந்த மாற்றுத்திறனாளியின் பெயர் கிருஷ்ணப்பா ரத்தோட் என்பதையும் ரோஹித் கேட்டு தெரிந்து கொண்டார். டீ கடை ஒன்றில் கிருஷ்ணப்பா பணிபுரிந்து வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அந்த வேலையும் போயுள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான கிருஷ்ணப்பா, தனது உடல்நிலையை தாண்டி, குடும்ப சூழ்நிலை காரணமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

தொடர்ந்து, அடுத்த டெலிவரிக்கு நேரம் ஆவதாக கூறி, கிருஷ்ணப்பா அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார். இது தொடர்பான பதிவை ரோஹித் தனது Linkedin தளத்தில் வெளியிட, அவருக்கு பணஉதவி செய்வது தொடர்பான தகவலையும் அதில் குறிப்பிட்டிருந்தார். வெறுமென பாராட்டுக்களை மட்டும் அந்த டெலிவரி ஊழியருக்கு தெரிவிக்காமல், பலரும் அவருக்கு மருத்துவ உதவி மற்றும் வேலைகள் கொடுக்கவும் முன் வந்துள்ளனர்.

உடலில் உள்ள குறையை தாண்டி, குடும்பத்திற்காக உழைக்கும் எண்ணத்தில் செயல்பட்டு வரும் டெலிவரி ஊழியரான கிருஷ்ணப்பாவை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பதிவின் காரணமாக, அவரது வாழ்க்கை கூட விரைவில் மாறலாம் என கருதப்படுகிறது.

Also Read | "எனக்கும் அது நடந்துச்சு".. இனவெறி பேதத்துக்கு ஆளானதாக முன்னாள் நியூசி. கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் பரபரப்பு அறிக்கை..!

BENGALURU, DELIVERY BOY, HEARTWARMING STORY, FOOD DELIVERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்