நோட் பண்ணுங்கப்பா.. போனது என்னமோ கேக் டெலிவரி பண்ணதான்.!.. ஆனா உள்ள இருந்தது என்ன தெரியுமா..? செம வைரலான இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இப்போதெல்லாம் நிறுவனங்களில் வேலை செய்ய அதீத ஸ்மார்ட்னஸ் தேவை. புதிது புதிதாக இன்னோவேடிவ் ஐடியாக்களுடன் வரும் ஊழியர்களையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அப்படி இருக்கும்போது, வேலை தேடுவதிலேயே தம்முடைய ஸ்மார்ட்னஸை காட்டியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.

Advertising
>
Advertising

Also Read | காபி ஆர்டர் எடுக்கும் ட்விட்டர் சிஇஓ.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. பின்னணி என்ன??

ஆம், பெங்களூருவை சேர்ந்த அமன் கந்தல்வால் என்பவர் ஸொமாட்டோ டெலிவரி ஊழியரை போன்று தான் வேலை தேடி செல்லும் நிறுவனங்களுக்கு சென்றுள்ளார். அங்குள்ள அதிகாரிகளுக்கு உணவு டெலிவரி செய்வதுபோல இவர் சென்று தான் எடுத்து சென்ற உணவு டெலிவரியுடன் சேர்த்து, தமது சுய விவர குறிப்புகள் அடங்கிய தனது resume-ஐயும் அத்துடன் இணைத்து கொடுத்தி வந்திருக்கிறார். மேலும் இதற்கான விளக்கத்தை தானே தமது ட்விட்டரில் கொடுத்துள்ளார்.

அதில் அமன் கந்தல்வால், “நான் ஸொமாட்டோ டெலிவரி பாய் போலவே நிறுவனத்துக்குள் போய் என்னுடைய resume-ஐ, உணவு எடுத்துச் செல்லும் pastry பாக்ஸில் வைத்து கொடுத்துள்ளேன். பல நிறுவனங்களிலும் இப்படி கொடுத்திருக்கிறேன். பொதுவாக எல்லா resumeகளும் குப்பைத்தொட்டிக்கு தான் போகும். ஆனால் என்னுடையது உங்கள் வயிற்றுக்குள் போகும்” என்று தன் உணவை மறைமுகமாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.  மேலும் தமது இந்த பதிவில் அவர் தனது linkedin profile-ஐயும் பகிர்ந்திருக்கிறார்.

அமன் கந்தல்வாலுக்கு முன்பாகவே  இதே வேலையை வேறொரு வெளிநாட்டவரும் பார்த்திருக்கிறார்.  ஆம், கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் லுகாஸ் என்கிற இளைஞர் இப்ப்டித்தான் செய்திருக்கிறார்.  இவர் அந்நாட்டில் பிரபலமான ஒரு உணவு டெலிவரி நிறுவனமாக விளங்கும் postmates-ன் டி-ஷர்ட்டை அணிந்து, அங்குள்ள நிறுவனங்களுக்கு donutகளை டெலிவரி செய்வது போன்றே சென்று டெலிவரி செய்துள்ளார். அத்துடன் மனிதர் அதில் தனது resume-ஐயும் சேர்த்துவைத்து கொடுத்து, தனக்கு வேலை கேட்டுள்ளார். இந்த விஷயம் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read | "பேரக் குழந்தை பாத்த வயசுல.." பெண் போட்ட பிளான்.. வேற லெவல் வேஷம் போட்டு பயங்கரமாக பாத்த மோசடி வேலை..

DELIVERY BOY RESUME WITH PASTRY BOX, VIRAL, JOB SEEKING, INTERVIEW, WALKIN, JOBS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்