காரில் சிக்கி உயிரிழந்த இளம்பெண்.. "கூடவே இன்னொரு பொண்ணும் ஸ்கூட்டில இருந்துருக்காங்க.." திடுக்கிடும் ட்விஸ்ட்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில், ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவமும், தற்போது இது குறித்து தெரிய வந்துள்ள தகவலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | தேவாலயங்கள் தான் குறி.. பகலில் நோட்டம், இரவில் கொள்ளை.. கொத்தாக தூக்கிய போலீஸ்.. திடுக்கிடும் பின்னணி!!
டெல்லி மாநிலத்தில் கன்ஜாவ்லா - சுல்தான்புரி என்னும் பகுதியில், புத்தாண்டு தினத்தன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இளம் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில் அப்பகுதியில் வந்த கார் ஒன்று அந்த, இளம்பெண் பயணித்த ஸ்கூட்டியின் மீது வேகமாக மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விபத்து நடந்த போதிலும் அந்த கார் நிற்காமல் படுவேகமாக சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்கூட்டியை இடித்த அதே வேகத்தில் அந்த இளம் பெண் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் அந்த கார் வாகனத்தை நிறுத்தாமல் சென்றபடியே இருக்க இதனை கவனித்த அப்பகுதியைச் சென்ற நபர் ஒருவர் உடனடியாக காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளார்.
இதற்கடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு இளம் பெண்ணின் உடல் ஒன்று சாலை அருகே கிடப்பதாக போலீசாருக்கு மற்றொரு தொலைபேசி அழைப்பும் வந்துள்ளது. இந்த இரண்டு பெண்களும் ஒரே ஆள் தான் என்பது உறுதியான நிலையில், அவரது உடலை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், நீண்ட தூரத்திற்கு காரில் சிக்கி இழுத்து வரப்பட்டதால் அதிக காயங்கள் காரணமாக அந்த பெண் உயிரிழந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்கூட்டியில் வந்த இளம் பெண் மொத்தம் 12 கிலோ மீட்டர் தூரம் வரை காருக்கு அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட திடுக்கிடும் தகவலும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காரில் பயணம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்மந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறிப்பிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை இந்த சம்பவம் உண்டு பண்ணி உள்ள நிலையில், தற்போது இளம்பெண்ணின் மரணம் குறித்து வெளியாகி உள்ள தகவல், பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
முன்னதாக, இந்த விபத்து நேரும் போது ஸ்கூட்டியில் அந்த பெண் மட்டும் தான் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அந்த ஸ்கூட்டி விபத்தில் சிக்கிய போது அவருடன் வேறொரு இளம்பெண்ணும் இருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து நடைபெற்றதும் அந்த தோழி அங்கிருந்து தப்பித்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அவருக்கும் சிறிதாக காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இருவரும் இணைந்து ஸ்கூட்டியில் கிளம்புவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தோழி விபத்து குறித்து ஏன் எதுவும் பேசவில்லை என்ற கேள்வியும் தற்போது எழாமல் இல்லை.
Also Read | "வினோத ஆசை".. 18 லட்சம் ரூபாய் செலவு செஞ்சு ஓநாய் போல மாறிய இளைஞர்.. வைரலாகும் காரணம்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "12 கிலோ மீட்டர்".. காருக்கு அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்?.. நடந்தது என்ன?.. திடுக்கிடும் பின்னணி!!
- இரவு, பகல் பாராமல் பொது வெளியில் நோட்டமிட்ட தாய், மகன் .. வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்த உடல் பாகங்கள்?.. நாட்டை உலுக்கிய மற்றுமொரு கொடூரம்!!
- அப்பா, அம்மா, தங்கைன்னு.. ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்த இளைஞர்.. போலீஸ்கிட்ட அவர் சொன்ன காரணம் தான்!!.. அதிர்ச்சி சம்பவம்!!
- "என் மனைவிய கொலை பண்ணிட்டேன்".. போலீசாருக்கு வந்த அழைப்பு.. "வீட்டுல போய் பாத்ததும் தரைல".. திடுக்கிடும் பின்னணி!!
- மகளை சுட்டுக் கொன்ற தந்தை, உடலை சூட்கேசில் வைத்து மறைக்க உதவிய தாய்.. உறைய வைக்கும் ஆணவக்கொலை.!
- "அதுனால தான் எனக்கு சந்தேகம் வந்துச்சு".. ஷ்ரத்தா வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறும் வாட்டர் Bill.. வீட்டு உரிமையாளர் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!
- 70 வயது நபரின் மனைவிக்கு 19 வயசு.. "வாக்கிங் போன இடத்தில் பாட்டு பாடி இம்ப்ரஸ் பண்ண 50'ஸ் கிட்..
- "முன்னாடியே அதை செய்யணும்னு நெனச்சேன்.. ஆனா".. நடுங்க வச்ச ஷ்ரத்தா வழக்கு.. கைதான காதலன் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!
- "கேரளா, டெல்லி".. 2 கொலைகள்.. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒற்றுமைகள்??... பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!
- "என் மகளை கொன்னவன தூக்குல போடுங்க".. இந்தியாவையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. கண்ணீர் மல்க பேசிய தந்தை..!