‘டெல்லி பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்’... ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி’!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள், இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது, அங்குள்ள பெண்களிடையே வரவேற்பபை பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையின் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்யும் திட்டம், வரும் அக்டோபர் 29-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, துணை முதல்வர் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த திங்கள்கிழமை அன்று இலவச பயணத்தை நினைவுப்படுத்தியிருந்தார். இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை முதல் பெண்கள் டிக்கெட் வாங்காமல் இலவசமாக பேருந்துகளில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பிங்க் நிறத்தில் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிக்கெட் வாங்கியும் பெண்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து 3-ம் நாளில் வரும் ‘பாய் தூஜ்’ எனும், சகோதரர்கள் மீது சகோதரிகள் பாசம் காட்டும் பெரு விழா, வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். அதை முன்னிட்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் பாதுகாப்பாக பயமின்றி பயணம் செய்ய, ஒவ்வொரு பேருந்துக்கும் என்று புதிதாக 13 ஆயிரம் மார்ஷெல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
'மீட் பண்ணனுமா?'.. 'ரூ.18 லட்சம் இழந்த நபர்.. 23 பெண்கள் கைது'.. அதிரவைத்த 'போலி டேட்டிங் வெப்சைட்'!
தொடர்புடைய செய்திகள்
- ‘மது அருந்திக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம்’.. ‘ஹோட்டல் ஊழியர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..
- ‘அம்மா என்னால மூச்சுவிட முடியல’.. ‘உயிருக்குப் போராடிய கடைசி நொடிகளில்’.. ‘பெண் தாய்க்கு அனுப்பிய அதிரவைக்கும் மெசேஜ்’..
- ‘தீபாவளியை முன்னிட்டு’.. ‘இலவச அன்லிமிடட் ஆஃபரை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்’..
- ‘டாக்டர் அலட்சியம்’.. ‘முகம் இல்லாமல் பிறந்த குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!
- ‘5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய்’.. ‘படுக்கையறையில் வைத்த ரகசிய கேமராவால்’.. ‘சிக்கிய சென்னைப் பெண்’..
- 'ஆற்றுக்கு நடுவே ஆபத்தான பாலம்'.. '60 பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்!'
- ‘கொதிக்கும் எண்ணெயைக் கொண்டு வந்து’.. ‘குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு’.. ‘ஆண் நண்பரால் நடந்த கொடூரம்’..
- ‘வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி’... ‘உறவினர்போல் பேச்சு கொடுத்து’... ‘பெண் ஒருவர் செய்த காரியம்’... ‘அதிர்ச்சியான மருமகள்’!
- 'ஷேர் ஆட்டோவும் பேருந்தும் மோதி கோர விபத்து'.. சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்!