கர்ப்பிணிக்கு அனுமதி மறுப்பு.?..ஹாஸ்பிட்டல் வாசலில் நடந்த பிரசவம்.. நாட்டையே அதிர வைத்த சம்பவம்..முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வாசலில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | Kallakurichi: மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்.. இன்று நடைபெறும் நல்லடக்கம்.. பரபரப்பில் கள்ளக்குறிச்சி..!

டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த 18 ஆம் தேதி மாலை கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியே காத்திருந்தபோது அடுத்தநாள் அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, சாலை ஓரத்திலேயே அவர் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இந்நிலையில், தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வு குறித்து டெல்லி மகளிர் கமிஷன், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அனுமதி

இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணுடன் வந்த மற்றொரு பெண் தாங்கள் இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்தோம் என்றும் அவரை பரிசோதித்த மருத்துவர் பிரசவ வலி இன்னும் ஏற்படவில்லை எனவும் சொன்னதாக கூறியிருக்கிறார். அதன்பின்னர் அனுமதிக்கப்பட்ட பின்னர் மருத்துவர் வந்து பார்ப்பார் என தங்களிடம் சொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் அந்தப்பெண்.

இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் இதனை மறுத்திருக்கிறது. இதுகுறித்து பேசிய மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர்,"சேர்க்கைக்கான ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தோம். அதனை பூர்த்தி செய்து எடுத்துவரும்படி கூறினோம். ஆனார் அவர்கள் திரும்ப வரவே இல்லை. நாங்கள் அனுமதிக்க மறுக்கவில்லை" என்றார்.

சிகிச்சை

மேலும், இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மருத்துவமனை நிர்வாகம் யாரையும் அனுமதிக்க மறுப்பதில்லை. அன்று மாலை 5.45 மணிக்கு மருத்துவர் அந்த பெண்ணை பரிசோதித்தார். அப்போதே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் மருத்துவமனைக்கு திரும்ப வரவில்லை. ஆகவே, நிர்வாகம் யாருக்கும் அனுமதி மறுக்கவில்லை. அடுத்தநாள் சாலை ஓரத்தில் அவருக்கு பிரசவம் நிகழ்ந்ததாக கேள்விப்பட்டவுடனேயே மூத்த மருத்துவர் உடனடியாக தாய் மற்றும் சேயை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். இருவரும் நலமுடன் இருக்கின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இதுகுறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் குழு ஒன்றை நியமித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில், மருத்துவமனையில் வாசலில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரரசவம் நிகழ்ந்தது நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு.. இறுதிச் சுற்றில் இந்தியரான ரிஷி சுனக்.. அடுத்தது என்ன?

HOSPITAL, DEHLI, PREGNANT WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்