"கதவு, ஜன்னல்'ன்னு எல்லாமே பூட்டி கெடந்து இருக்கு.." பதறிய அக்கம் பக்கத்தினர்.. கதவைத் திறந்ததும் வாசலில் கிடந்த கடிதம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி மாநிலம், தெற்கு டெல்லியை அடுத்த வசந்த் விஹார் என்னும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

இதில் அமைந்துள்ள ஒரு வீட்டின் கதவு, பல மணி நேரமாக திறக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதே போல, இந்த வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன.

இதன் காரணமாக, சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், முதலில் கதவைத் தட்டி பார்த்துள்ளனர். ஆனால், கதவு திறக்கபடாத நிலையில், வீடும் உள் பக்கமாக பூட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

வாசலில் கிடந்த கடிதம்

உடனடியாக அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, கதவின் அருகே சில காகிதங்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதில், இந்த வீடு முழுக்க விஷவாயு பரவி இருப்பதாகவும், கதவைத் திறந்ததும் உள்ளே வர வேண்டாம் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதே போல, ஜன்னலைத் திறந்து விட்டு சில நேரம் கழித்து வர வேண்டும் என்றும், உள்ளே நெருப்பை பற்ற வைக்க வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

இதனை படித்ததும் போலீசார் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். தொடர்ந்து, தேவையான முன்னேற்பாடுகள் செய்த பிறகு, வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். அங்குள்ள அறை ஒன்றின் கட்டிலில் மஞ்சு (வயது 54)  உயிரிழந்து கிடந்துள்ளார். அதே அறையில், மஞ்சுவின் மகள்கள், அன்ஷிகா (வயது 27) மற்றும் அங்கு (வயது 25) ஆகியோரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீடு முழுவதும் விஷவாயு இருந்து, மூவரும் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, மஞ்சுவின் கணவர் உமேஷ் ஸ்ரீவத்சவா கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக, மஞ்சுவும் அவரது மகள்களும் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே போல, அக்கம் பக்கத்தினரிடம் பேசுவதையும் அவர்கள் குறைத்து வந்துள்ளனர்.

இது பற்றிய தகவல், போலீசார் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, மூவரின் மரணம் குறித்து தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DELHI, HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்