VIDEO: சரியான டைமிங்...! 'ஒரு வண்டியில இருந்து..' 'இன்னொரு வண்டிக்கு பாய்ந்த நபர்.. ' - சினிமாவை மிஞ்சிய காட்சி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஒரு இளைஞர்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்குபெறும் இந்த போராட்டத்தில் மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் டெல்லியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இரண்டாம் நாளாக தொடரும் இந்த டெல்லி சலோ போராட்டத்தில் ஹரியானா மாநிலம் அம்பாலா வில் ஷாம்பு எல்லைப் பகுதியில் சென்றபோது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கூட்டத்தை கலைக்கவும், அவர்கள் டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலீஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். மேலும் கண்ணீர்ண புகை குண்டுகளும், தடியடிப் பிரயோகமும் விவசாயிகள் மீது நடத்தப்பட்டது.

இவ்வாறு நடைபெற்று கொண்டிருக்கையில் நவ்தீப் சிங் எனும் பட்டதாரி ஒரு இளைஞர், ஷாம்பு எல்லைப் பகுதியில் விவசாயிகளை போலீஸ் தண்ணீர் பீய்ச்சி கலைக்க முயன்ற போது, நவ்தீப் சிங் போலீஸாரின் தடியடிகளைத் தாண்டி, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனத்தின் மேல் தாவி தண்ணீரை நிறுத்தினார்.

அம்பாலாவைச் சேர்ந்த பட்டதாரியான இளம் விவசாயி
நவ்தீப் 250 கிராமங்களைச் சேர்ந்த பல விவசாயிகளில் ஒருவர். அவர் தண்ணீர் பீரங்கியை அணைத்தவுடன், பல விவசாயிகள் தங்கள் அணிவகுப்போடு முன்னேறினர். இந்தக் காட்சிகள் நேற்று (26-11-2020) முழுவதும் இணையத்தில் வைரலாகி உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்