‘தீபாவளிக்கு தடையை மீறி’... ‘பொதுமக்கள் செய்த காரியம்’... ‘மோசமடைந்த நகரங்கள்’... ‘செய்வதறியாது தவிக்கும் மாநில அரசு’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தீபாவளிப் பண்டிகை பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகையானது நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் மத்தியில் மக்கள் பல மாதங்களாக வீடுகளில் முடங்கிக் கிடந்த நிலையில் தீபாவளி பண்டிகை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கொரோனாவால் டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி வெடித்த பட்டாசு மற்றும் பஞ்சாப், அரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து ‘மோசம்’ என்ற அபாய நிலையை அடைந்தது.

டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தைத் தாண்டியதால், டெல்லி முழுவதும் எந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே கொரோனாவால் டெல்லி திண்டாடி வரும் நிலையில் காற்று மாசு மற்றொரு தலைவலியாக உருவாகி, செய்வதறியாது தவித்து வருகின்றது அம்மாநில அரசு.

இதேபோல் சென்னையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட சில மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தீர்த்தனர். இதனால் காலையில் 100 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு மாலையில் 159 ஆக அதிகரித்தது.

இதேபோல் தூத்துக்குடி, கடலூர், மதுரை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால் கொரோனா பரவலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்,. சிறியவர்கள், முதியவர்களுக்கு பட்டாசு புகை நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்