"போட்டிக்கு நாங்க வரலாமா?.." பிரதமர் பிறந்தநாள் ஸ்பெஷலாக உணவகத்தின் அதிரடி அறிவிப்பு.. "பரிசு மட்டும் இத்தனை லட்சமா??"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பிரதமராக இருந்து வரும் நரேந்திர மோடி, செப்டம்பர் 17 ஆம் தேதியன்று (நாளை) தனது 72 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | டோல்கேட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்.. ஏன் கடைசிவரை யாருமே தடுக்கல.. பரபரப்பு சம்பவம் குறித்து நெட்டிசன்கள்..!

இதனை முன்னிட்டு, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமான நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டம் போட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதமர் மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார்.

இதன் பின்னர், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, தற்போது இரண்டாவது முறையாக தொடர்ந்து பிரதமராக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது 72 ஆவது பிறந்தநாளை அவர் கொண்டாட உள்ளதால், பாஜக தொண்டர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் என அனைவரும் இதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக இயங்கி வருகிறார்கள்.

அந்த வகையில், மோடியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டெல்லியில் உள்ள உணவகம் ஒன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 56 வகை உணவு விருந்து ஒன்றை புதிதாக அந்த உணவகம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த உணவு வகைகள் அனைத்தையும் 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது போக, இதனை சாப்பிடும் தம்பதிகளுக்கு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே ஒரு தம்பதிக்கு மட்டும் கேதார்நாத் செல்ல இலவச சுற்றுலா வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அந்த உணவகம் தெரிவித்துள்ளது.  17 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை இந்த வாய்ப்பு இருப்பதாகவும் அந்த உணவகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், டெல்லியில் பலரும் இந்த உணவகம் இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.

Also Read | காதலை மறக்க முடியாமல் புதுப்பெண் விபரீத முடிவு.. மனைவியின் முடிவை தாங்காத மாப்பிள்ளையும் அடுத்து எடுத்த சோகமுடிவு..!!

NARENDRAMODI, DELHI RESTAURANT, COMPETITION, NARENDRA MODI BIRTHDAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்