பிரபல பெண் யூடியூபர் மீது எழுந்த புகார்.. ஒரே இரவில் சிக்கிய தொழிலதிபர்.. "கொஞ்ச நாள்லயே 80 லட்ச ருபாய் அபேஸா?" இந்தியாவை அதிர வைத்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் பிரபல யூடியூபர் பெண் ஒருவர், தனது கணவருடன் சேர்ந்து செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விஷயம், இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

டெல்லி அருகேயுள்ள ஷாலிமார் பாக் என்னும் பகுதியை சேர்ந்தவர் நம்ரா காதிர். இவரது கணவர் பெயர் மணீஷ் என்ற விராட் பெனிவால்.

நம்ரா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு சுமார் 6 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தினேஷ் யாதவ் என்ற இளம் தொழிலதிபருக்கு நம்ராவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

விளம்பர நிறுவன உரிமையாளராக தினேஷ் உள்ள நிலையில், நம்ரா மீது போலீசில் அவர் அளித்துள்ள புகார் தான் தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன் நம்ராவுடன் தினேஷ்குக்கு அறிமுகம் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், நம்ராவின் சேனலில் தன்னுடைய விளம்பர நிறுவனம் குறித்த விளம்பரம் ஒன்றும் வேண்டும் என தினேஷ் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கு 2 லட்ச ரூபாயை நம்ரா தரும்படி கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர் இன்னும் 50,000 ரூபாய் கேட்டு நம்ரா வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது. நம்ரா சேனலில் விளம்பரம் கொடுத்த போதும் பெரிய அளவில் தினேஷ் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், தினேஷை விரும்புவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாவும் நம்ரதா சொல்லியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றித் தெரிந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நம்ரா தனது கணவர் மணீஷுடன் கிளப்பி ஒன்றின் விருந்தில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கே தினேஷும் வர, அதே இடத்தில் அவர்கள் அறை எடுத்து தங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த நாள் காலையில், தினேஷின் ஏடிஎம் கார்டு, பேங்க் அக்கவுண்ட் குறித்த விவரங்களை கேட்டு நம்ரா மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி தரவில்லை என்றால், போலியாக தன்னிடம் அத்துமீறியதாக கூறி வழக்கு கொடுப்பதாக தினேஷை மிரட்டி உள்ளார் நம்ரா. இதன் பின்னர், தினேஷிடம் இருந்து சுமார் 80 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக நம்ரா பெற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் தான் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் தினேஷ்.

பிரபல யூடியூபர் மீது இப்படி ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

NAMRA QADIR

மற்ற செய்திகள்