"25 வருசமா ஆள புடிக்க முடியல".. கடைசி'ல போலீஸ் போட்ட ஸ்கெட்ச்.. "இப்டி வசமா சிக்குவோம்னு மனுஷன் நெனச்சு இருக்க மாட்டாரு"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

25 ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நபர் குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலும், அதன் பின்னர் நடந்த சம்பவமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் வசித்து வந்த கூலித் தொழிலாளியான கிஷன் லால் என்பவர், கடந்த 1997 ஆம் ஆண்டு  இரவில் உயிரிழந்து கிடந்தார். அந்த சமயத்தில் அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில், கிஷன் லால் உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியும் வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரிப்பதற்காக அந்த சமயத்தில் தேடி உள்ளனர். ஆனால் ராமுவை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை நடந்த இடத்தில் கண்ட சாட்சி, குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படம், அடையாளம் என எதுவுமே தெரியாததால் இந்த வழக்கு தொடர்பாக துப்பு துலக்க முடியாமல் போலீசாரும் சிரமப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், பழைய வழக்குகளை விசாரித்து வரும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு, கடந்த ஆண்டு கிஷன் லால் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை கையில் எடுத்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராமு என்பவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி போலீசார் தேடி வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், ராமு எங்கே இருக்கிறார் என்பது தொடர்பாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் ஜான்கிபுரம் என்ற பகுதியில் இ ரிக்ஷா ஓட்டுநராக ராமு இருந்து வரும் முக்கிய தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இ ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதாக கூறி, ஜான்கிபுரம் பகுதியில் இருந்த இ ரிக்ஷா ஓட்டுநர்களை மாறுவேடத்தில் இருந்த போலீசார் ஒரே இடத்தில் வரவழைத்துள்ளனர். இதனை நம்பி சம்பவ இடத்திற்கு வந்த ராமு, போலீசார் வழியில் சிக்கி அவர்கள் அவர்களால் கைது செய்யப்பட்டார்.

மேலும் கிஷன் லால் மனைவியை வரவழைத்து அவர் தான் ராமு என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பணத்திற்காக கிஷன் லாலை கொலை செய்ததையும் ராமு ஒப்புக்கொண்டார். அதே போல போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தனது பெயரை அசோக் யாதவ் என மாற்றிய ராமு, அதற்கான ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

25 ஆண்டுகள் போலீசார் கையில் சிக்காமல் இருந்து வந்த குற்றவாளியை தற்போது போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர்.

POLICE, ACCUSED, 25 YEARS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்