பக்காவா பிளான் போட்டு நகைக்கடையில் கைவரிசை காட்டிய திருடன்.. கடைசில பிளாஸ்டிக் பை மூலமாக வந்த டிவிஸ்ட்.. ஸ்பாட்டுக்கு போன போலீசுக்கு வந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் நகைக்கடையில் கொள்ளையடித்த நபரை காட்டிக்கொடுத்திருக்கிறது பிளாஸ்டிக் பை ஒன்று. இதன்மூலம் கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
கொள்ளை
ஆகஸ்ட் 13 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் நகைக்கடையின் உரிமையாளர் அனுராக் கர்க் மற்றும் அவரது பணியாளர் கடையில் இருந்தபோது கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி ஒருவர் கடைக்குள் வந்திருக்கிறார். இதனால் இருவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் அந்த மர்ம ஆசாமி கையில் இருந்த துப்பாக்கியை நீட்டவே இருவரும் பதற்றமடைந்திருக்கின்றனர். துப்பாக்கி முனையில் பத்து தங்கச் சங்கிலிகள் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை அந்த நபர் திருடிச் சென்றிருக்கிறார். இதனையடுத்து உடனடியாக அனுராக் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர் சாலையைக் கடப்பதும், இ-ரிக்ஷாவை எடுத்துச் செல்வதும் தெரிந்தது. எனினும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி காணாமல் போனதால், அவரை முழுமையாக கண்காணிக்க முடியவில்லை. இடது கையில் பிளாஸ்டிக் பையும், வலது கையில் துப்பாக்கியும் எடுத்து வந்ததை காவல்துறையினர்.கண்டுபிடித்தனர். மேலும், அந்த மர்ம ஆசாமி கொண்டுசென்ற பிளாஸ்டிக் பையில் ஒரு உள்ளூர் நிறுவனத்தின் பெயர் இருந்திருக்கிறது.
பிளாஸ்டிக் பை
இதனையடுத்து அந்நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியில், காவல்துறையினரின் ரகசிய குழுக்கள் வேலை செய்ய துவங்கியது. சுமார் 10 நாட்கள் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் ஷாலிமார் பாக் அம்பேத்கர் நகரில் வசிக்கும் ரிங்கு ஜிண்டால் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அவர் இதற்கு முன்பு மார்ச் 2, 2019 அன்று பிரசாந்த் விஹாரில் உள்ள ஒரு வங்கியைக் கொள்ளையடித்தபோது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரை காவல்துறையினர் விசாரித்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து காணாமல்போன 7 தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டிக்கின்றன. மேலும், அவர் கொள்ளைக்கு பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்திருக்கிறது. 76 கிராம் எடையுள்ள ஒரு சங்கிலியை அடமானம் வைத்து ரூ.2,60,000 கடன் வாங்கி அதனை வைத்து சூதாடியுள்ளார் ஜிண்டால். அதில் 1,50,000 ரூபாயை இழந்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார் அவர். இதனையைடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காதல் திருமணம் செஞ்ச மகள்.. கல்யாணத்துக்கு போகாத அம்மா.. கோவத்துல கணவர் செஞ்ச காரியத்தால் பதறிப்போன உறவினர்கள்..!
- குலைச்சுக்கிட்டே இருந்த நாய்.. பூட்டிய வீட்டுக்குள்ள இருந்து வந்த துர்நாற்றம்.. அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள்.. திருப்பூரில் திக்.. திக்..
- பலமுறை கால் செஞ்சும் எடுக்காத பெற்றோர்.. பதறிப்போன மகள்.. கொஞ்ச நேரத்துல பரபரப்பான கரூர்..!
- நடிகையின் மரண வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்..!
- "ஹே, பேன்ட் பாக்கெட்டுல என்னப்பா அது?".. விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிய வாலிபர்.. "பல வருசமா இத தான் வேலையா வெச்சு இருக்காராம்"
- 100 வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி.. வேகமா வந்து விலங்கு மாட்டிய போலீஸ்.. "இப்படி கூட Arrest பண்ணுவாங்களா??"
- அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ.60 லட்சம்.. அசராமல் உருட்டிய இளைஞர்.. ஆன்லைனில் வேலை தேடிய இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- 8 மாசத்துக்கு முன்னாடி காணாமல்போன பெற்றோரை இழந்த சிறுவன்.. மொத்த படையையும் இறக்கி கண்டுபிடிச்ச போலீஸ்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
- ஒரேநாள்ல 512 போன்கால்.. அதுவும் ஒரே பெண்கிட்ட இருந்து .. கடுப்பான காவல்துறை.. கடைசியா போன் பண்ணி அந்த பெண் சொன்ன விஷயம் இருக்கே..!
- "ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் சூடாவே இல்ல சார்".. போலீஸை அழைத்த இளைஞர்.. Spot'ல வந்து போன் பண்ணது யாருன்னு பாத்த போலீஸ்க்கு செம ஷாக்