VIDEO: 'அந்த காரணம் தான் அல்டிமேட்!'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை!.. டெல்லியில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மது வாங்குவதற்காக கடைகள் முன்பு வரிசையில் நின்றவர்கள் மீது மலர் தூவி வரவேற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அத்துடன், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மதுபானக் கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லி சந்தர் நகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு இன்று ஏராளமானோர் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர், வரிசையில் நின்றவர்கள் மீது பூக்களை தூவி வரவேற்றார். 'நீங்கள் நமது நாட்டின் பொருளாதாரம். அரசாங்கத்திடம் இப்போது பணம் இல்லை' என்றும் குடிமகன்களைப் பார்த்து அந்த நபர் கூறுகிறார்.
குடிமகன்கள் மீது மலர் தூவி வரவேற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
‘இனி சென்னை மக்கள் காய்கறி இங்கே போய்தான் வாங்கணும்’.. தற்காலிகமாக இடம் மாறும் கோயம்பேடு மார்கெட்..!
தொடர்புடைய செய்திகள்
- "தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- 'மச்சான் நான் என்ன செய்வேன் தெரியுமா'?... 'இன்ஸ்டா குரூப்பில் நடந்த சாட்டிங்'...'ஆடிப்போன மாணவி'.... ட்விட்டரில் வெளியான மாணவர்களின் அட்டகாசம்!
- 'இதுதான் கொரோனாவிற்கு மருந்து...' 'உங்க முன்னாடியே குடிச்சு காட்டுறேன்...' இதுவரைக்கும் எங்க நாட்டுல யாருமே சாகல...!
- 'நானோ’ துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல் பூச்சு...' 'கொரோனா' வைரசை செயலிழக்க செய்யும் 'புதிய தொழில்நுட்பம்...' 'சென்னை ஐ.ஐ.டி.யின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'சென்னை கழிவு நீரில் 'கொரோனாவின் இறந்த செல்கள்'... 'தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக கண்டுபிடிப்பு'... பரபரப்பு தகவல்!
- 'பொது இடங்களில்' வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 'புதிய யுக்தி'... 'டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'இந்த மருந்து கொரோனாவ கண்ட்ரோல் பண்ணுது...' '11 நாளில் சரி ஆயிடுறாங்க...' 'எனர்ஜியும் நல்லாவே கிடைக்குது...' தொற்றுநோய் தலைவர் அறிவிப்பு...!
- ''எங்களுக்கு தனி வரிசை வேண்டும்...'' 'சம உரிமையை நிலைநாட்டிய பெண்கள்...' 'காய்கறிக் கூடையுடன்' களத்தில் இறங்கிய 'மகளிர்...'
- மதுபானத்துக்கு 70% சிறப்பு 'கொரோனா' கட்டணம்... அதிரடியாக 'அறிவித்த' மாநிலம்!
- ‘2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை’... 'இந்தியாவில்'... 'மகிழ்ச்சியுடன் கூறிய 2 மாநிலங்கள்'!