நீங்க இப்படி கூடு கட்டினா.. பறவைகள் வந்து அதுல வாழுமா? கேலி பேசியவர்களின் வாயை அடைக்க வைத்த பறவைக் காதலன்
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி: டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் கத்ரி என்பவர் இதுவரை இரண்டரை லட்சம் பறவை கூடுகளைக் கட்டி சாதனையாளராக இடம் பெற்றுள்ளார்.
அழிந்து வரும் உயிரினங்கள்:
இந்த உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை பிற உயிரினங்களுக்கும் உள்ளது. ஒரு உயிரினம் அழிகிறது என்றால் பூமி சமநிலை பிறழ்கிறது என்று சொல்லலாம். காடுகள், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் தொடர்ச்சியாக நிறைய பறவை இனங்கள், அரிதான பூச்சியினங்கள், விலங்கினங்கள் அழிந்து வருவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். முன்பு இருந்த பறவையினங்கள் பல அழிந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கதிர்வீச்சுகள் நிறைய பறவை, பூச்சியினங்களை அழித்து விட்டதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான தரவுகள் இல்லை என மறுப்பவர்களும் உண்டு.
கூடுகள் கட்டும் பறவை காதலர்:
இயற்கை வளங்கள், காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுவாழ் உயிரினங்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மனிதர்கள் பல ஆபத்துக்களை சந்திப்பதும் நடக்கிறது. பூமியில் இவ்வளவு அழிவுகள் நடந்தாலும் இயற்கையின் மீதும், பறவை விலங்கினங்கள் மீதும் பரிவு காட்டும் வெகுசில நபர்கள் இருக்க தான் செய்கின்றனர். அப்படி ஒரு நபர் தான் டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் கத்ரி. இவர் இதுவரை இரண்டரை லட்சம் பறவை கூடுகளைக் கட்டி சாதனையாளராக இடம் பெற்றுள்ளார்.
ஏராளமான விருதுகள்:
இவர் ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். பறவைகளுக்காக கூடுகள் கட்டுவதை அவர் சிறுவயது முதலே பழக்கப்படுத்திக் கொண்டார். சணல், புல், பிளாஸ்டிக், மரம் போன்றவை கொண்டு அவர் கூடுகளைக் கட்டுகிறார். அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கும் பறவைகளுக்காக வீட்டின் மாடியிலும் பால்கனியிலும் தோட்டத்திலும் கூடுகள் கட்டுவதற்கு அவர் பயிற்சி அளித்து வருகிறார்.
தொடக்கத்தில் இதை பலர் கேலியாகப் பார்த்தனர். இவர் கூடு கட்டி விட்டால் அதில் குடியிருக்க பறவைகள் வந்து விடுமா என்று பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் கட்டிய கூடுகளுக்குப் பறவைகள் வரத்தொடங்கியதும் அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சுடுகாட்டில் நடந்த இறுதிச்சடங்கு.. கடைசி நொடியில் நடந்த அதிசயம்.. ஷாக் ஆன உறவினர்கள்
- விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச கவனத்துக்கு கொண்டு போன பிரபலங்கள்! .. அடுத்த ‘சில மணி நேரத்திலேயே’ விளக்கம் அளித்து வெளியுறவுத்துறை ட்வீட்!
- “என்ன நடக்குது டெல்லியில?” - விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கொந்தளித்த ‘முன்னாள் ஆபாச பட நடிகை’ மியா கலிஃபா!.. ‘தீயாய்’ பரவும் ட்வீட்!
- 'UK-வில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 266 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி!'.. 'இன்று இரவு முதல் விமான சேவைகள் ரத்து!'
- ‘சென்னையில்’ ஒரே நாளில் 500-க்கும் மேல் பாதிப்பு... மோசமான நிலைமை... ‘முந்திக்கொண்டு’ முன்னேறிய ‘தமிழகம்’!