இந்தியா முழுவதும் டிராவல் செஞ்சு கின்னஸ் சாதனை.. ஆத்தாடி 3 மாசத்துக்குள்ள இவ்வளவு கிலோமீட்டரா.?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | விபத்துல சிக்கி ஆளில்லாத தீவுல மாட்டிக்கொண்ட நபர்.. உயிரை காப்பாத்த 5 நாளா அவர் செஞ்சதை கேட்டு திகைச்சுப்போன மக்கள்..!

பயணம்

பயணம் பலருக்கும் பிடித்தமான விஷயம் தான். வேலைப்பளு, அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெகுதூரம் செல்ல பலரும் விரும்புவது உண்டு. ஆனால், வெகு சிலரே அதை நிகழ்த்திக்காட்டுகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் சுமித் குப்தா. இவர் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார். அதுவும் ரயில் மற்றும் பேருந்துகளில் மட்டுமே இவரது பயணம் தொடர்ந்திருக்கிறது. இவரது முயற்சியை கவுரவிக்கும் விதமாக இவருக்கு கின்னஸ் நிர்வாகம் சான்றளித்து கவுரவப்படுத்தியிருக்கிறது.

புது தில்லியின் சாராய் ரோஹில்லா பகுதியை சேர்ந்தவர் சுமித் குப்தா. இவருக்கு பயணம் என்றால் உயிர். இதனையே ஒரு சாதனையாக்க நினைத்திருக்கிறார் குப்தா. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் சுற்ற நினைத்த இவர் அதற்காக ரயில் மற்றும் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். 86 நாட்கள் தொடர் பயணத்தில் ஈடுபட்ட இவர் மொத்தமாக 61,445 கிலோமீட்டர் பயணித்து உள்ளார்.

கின்னஸ் சாதனை

ஒரு நாட்டிற்குள் குறிப்பிட்ட கால அளவில் அதிகபட்ச தூரத்தை கடந்தவர் என கின்னஸ் நிர்வாகம் இவருக்கு சான்று அளித்து கவுரவப்படுத்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி தனது பயணத்தை துவங்கிய சுமித் டிசம்பர் 5 ஆம் தேதி அதனை முடித்திருக்கிறார். இடைப்பட்ட 86 நாட்களில் அவர் 61,445 கிலோமீட்டர் பயணித்து அனைவரையும் திகைப்படைய செய்திருக்கிறார்.

இதுபற்றி பேசிய சுமித்,"இந்தியா மிகப்பெரிய நாடு. ஆகவே நான் ரயில்கள் மற்றும் பேருந்துகளை தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பேருந்து வசதிகள் நன்றாக இருப்பதை நான் அறிந்திருந்தேன். ஆகவே அதற்கு தகுந்தபடி எனது பயணத்தை திட்டமிட்டேன். இந்த மாநிலங்களில் பெரும்பாலும் பேருந்துகளையே பயணத்துக்கு பயன்படுத்தினேன்" என்றார்.

ரயில் பயணம்

ரயில் பயணம் குறித்து பேசிய குப்தா,"இந்தியாவில் 4 முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. டெல்லி, மும்பை, ஹவுரா மற்றும் சென்னை. நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரயில்கள் இந்த 4 முக்கியமான நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆகவே கின்னஸ் அமைப்பின் வழிகாட்டுதலின் படி இந்த ரயில் நிலையங்கள் வழியே பயணிக்க திட்டமிட்டேன்" என்றார்.

தனது தாய்வழி தாத்தாவிடம் இருந்து பயணம் செய்யும் ஆர்வத்தை பெற்றதாக கூறிய குப்தா, தனது 7 வயது முதல் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற வேட்கையில் இருந்திருக்கிறார். முக்கியமாக அரசு சார்ந்த போக்குவரத்து வசதிகளையே அவர் பயன்படுத்தியுள்ளார். இதனிடையே குப்தாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | தகர்க்கப்படும் 100 மீட்டர் உயர இரட்டை கோபுரங்கள்.. இறுதிக்கட்ட பணியில் அதிகாரிகள்.. மிரளவைக்கும் தகவல்கள்.!

TRAVELS, DELHI, MAN, TRAIN, BUS, GUINNESS WORLD RECORD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்