‘என்னாது ஃபைன் பணம் இவ்ளோவா’... ‘விரக்தி அடைந்த இளைஞர்’... 'செய்த வேலையால்'... ‘நடுரோட்டில் தவித்த போலீஸ்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போக்குவரத்து விதியை மீறியதற்காக, விதிக்கப்பட்ட அபராதத் தொகையால் அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர், செய்த காரியத்தால் போலீசார் திகைப்பில் ஆழ்ந்தனர்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனால் போக்குவரத்து போலீசார், ஆங்காங்கே சாலைகளில் நின்று, வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்காணித்து சோதித்து வருகிறார்கள். விதிகளை பின்பற்றாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையால், வாகன ஓட்டிகள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், டெல்லி ஷீக் சராய் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் என்ற இளைஞர்.

இவர் கடந்த வியாழக்கிழமையன்று, திரிவேணி காம்ப்ளக்ஸ் அருகில், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டார். அப்போது அவரையும், அவரது ஆவணங்களையும் போக்குவரத்து போலீசார் சோதித்தனர். அதில் ராகேஷ் மதுபோதையில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து ஹெல்மெட் அணியாதது, மதுபோதையில் வாகனம் ஒட்டியது என 11,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அந்த இளைஞர். தனது இருசக்கர வாகனமே 15 ஆயிரம் ரூபாய்தான் எனும்போது, 11 ஆயிரம் ரூபாய் அபராதமா என ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை, போலீசார் கண்முன்னாலேயே லைட்டரால் தீயிட்டு கொளுத்தினார். இந்த சம்பவத்தால் போலீசார் செய்வது அறியாது திகைத்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

DELHI, BIKE, FIRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்