'துர்நாற்றம் தாங்கல'... 'சுத்தம் செய்தபோது கிடைத்ததை பார்த்து'... 'உறைந்துபோன ஊர்மக்கள்'... 'இளைஞர் செய்த பகீர் காரியம்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இளைஞர் ஒருவர் முதலாளியை கொன்று கிணற்றில் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தஸ்லீம் (21) என்ற இளைஞர்  ஓம் பிரகாஷ் (45) என்பவரிடம் வேலை செய்துவந்துள்ளார். பால் முகவராக இருந்த ஓம் பிரகாஷிடம் வேலை செய்துவந்த தஸ்லீமுக்கு மாதம் ரூ 15,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனாவால் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் தஸ்லீமின் சம்பளம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தஸ்லீம் கேள்வி எழுப்பியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓம் பிரகாஷ் அவரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த தஸ்லீம் அவர் தூங்கும்போது தலையை கட்டையால் தாக்கியதுடன் கழுத்தையும் கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர் அவருடைய உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளார். இதையடுத்து ஓம்பிரகாஷ் குறித்து குடும்பத்தினர் கேட்டபோது, அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டதாக கூறிவிட்டு பயத்தில் தஸ்லீம் தலைமறைவாகியுள்ளார்.

இதற்கிடையே அப்பகுதியிலிருந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வர, அதை சுத்தம் செய்தபோது ஓம் பிரகாஷின் உடல் அதில் கிடந்தது அனைவரையும் உறையச் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கடைசியாக அவர் தஸ்லீமுடன்தான் இருந்தார் என்பதை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் மாயமானது தெரியவந்துள்ளது. போலீசார் தீவிரத் தேடுதலுக்குப் பின் டெல்லியில் தஸ்லீமைக் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்