"நான் என்ன கேட்டேன்.. நீங்க எதை அனுப்பிருக்கீங்க?".. ஆன்லைனில் உணவு ஆர்டர் செஞ்சது ஒரு குத்தமா? வைரல் வீடியோ.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைனில் ஆசையாக உணவு ஆர்டர் செய்த இளைஞர் ஒருவருக்கு, ஷாக் கொடுத்திருக்கிறது உணவகம் ஒன்று. தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித குலத்திற்கு ஏராளமான கொடைகளை அளித்துள்ளது. நம்மால் கண் இமைக்கும் நேரத்தில் இணையத்தின் உதவியுடன் ஏராளமான பணிகளை மேற்கொள்ள முடிகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள். இதன்மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்தே உணவை பெற்று, ருசிக்க முடிகிறது. ஆனால், சில நேரங்களில் நாம் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்துவிடுவதும் உண்டு. அப்படித்தான் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் நடந்துள்ளது. சோகத்தில் அவர் போட்ட வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனியன் ரிங்
டெல்லியை சேர்ந்தவர் ஒபைது. இவர் சமீபத்தில் உணவகம் ஒன்றிலிருந்து ஆனியன் ரிங் ஆர்டர் செய்திருக்கிறார். தனது பார்சலுக்காக ஒபைது காத்திருக்க, கொஞ்ச நேரத்திலேயே அவர் எதிர்பார்த்தது போலவே பார்சலும் வந்திருக்கிறது. ஆசையுடன் தனது உணவு பார்சலை ஒபைது பிரிக்கும் போதுதான் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், உள்ளே இருந்தது சமைக்கப்படாத வெங்காயம். அதை வட்ட வடிவமாக வெட்டி அனுப்பியுள்ளனர் அந்த உணவகத்தினர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், பார்சலை பிரித்ததும் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,"நான் உணவகம் ஒன்றிலிருந்து ஆனியன் ரிங் ஆர்டர் செய்திருந்தேன். எனக்கு என்ன வந்திருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்" எனக் குறிப்பிட்டு பார்சலை காண்பிக்கிறார் அவர். அதில் வட்டமாக வெட்டப்பட்ட சமைக்கப்படாத வெங்காயங்கள் இருப்பது தெரிகிறது.
இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவ," நீங்கள் சொன்ன அதே ஆனியன் ரிங்-கைத்தான் அவர்களும் அனுப்பியிருக்கிறார்கள்" என்றும் "இதனால் தான் எனக்கு ஆன்லைன் உணவுகள் மீது எப்போதும் ஒரு பயம் இருக்கிறது" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Also Read | "கணவருக்கு ஆண்மையில்லை".. சொந்த பந்தம் முன்னாடி பொய் சொன்ன மனைவிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உங்க நேர்மை பிடிச்சிருக்கு.. "இப்படி ஒரு லீவ் லெட்டரை நான் பார்த்ததே இல்லை".. மேனேஜர் பகிர்ந்த புகைப்படம்.. யாரு சாமி நீ?
- 40 வருஷமா செப்டிங் டேங்கில் மனைவியின் உடலை வைத்த 89 வயது கணவர்..? பரபரப்பு சம்பவம்.!
- மெட்ரோவில் நிரம்பி வழிந்த கூட்டம்.. மனைவியுடன் செல்பி எடுக்க போராடிய கணவர்.. வைரலாகும் கியூட் வீடியோ..!
- "இது மீன்தானா? என்ன இப்படி இருக்கு.?".. மீனவர் போட்ட வித்தியாசமான புகைப்படம்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!
- "அரசு வேலைக்கு செல்லக் கூடாது".. மனைவியை தடுக்க கணவன் செஞ்ச காரியம்.. திடுக்கிட வைத்த சம்பவம்..!
- அடிக்கடி அம்மா வீட்டுக்கு போன ‘காதல்’ மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச காரியம்.. அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
- அடிக்கடி மிக்சி, மசாலாவுடன் EB ஆபிஸ் போகும் நபர்.. காரணத்தைக் கேட்டு வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்..
- "ஐ.. நாம ஆர்டர் பண்ண போன் வந்துருச்சு.." பார்சல பிரிச்ச இளைஞருக்கு ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு
- ஆற்றில் மிதந்த BMW கார்.. அதிர்ந்த மக்கள்.. "போலீஸ் வந்து விசாரிச்சதுல.." கண்கலங்க வைக்கும் காரணம்
- "என்ன 500ரூபா நோட்டு வித்தியாசமா இருக்கு?".. கடைக்காரருக்கு வந்த சந்தேகம்.. வசமாக சிக்கிய பலே திருடன்..!