‘காதலர் தினத்தில் கல்யாணம்‘... ‘11 நாட்களிலேயே’... ‘மாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்’... 'அதிர்ச்சியான இளம்பெண்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமாகி 11 நாட்களே ஆன நிலையில், டெல்லி கலவரத்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவனை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஃபாக் ஹூசைன் (22) - தஸ்நீம் (20) என்ற இளம் தம்பதியினருக்கு கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தில் தான் உத்தரப் பிரதேச மாநிலம் புலேந்தேஷரில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர், தம்பதிகள் இருவரும் குடும்பம் நடத்த சந்தோஷமாக டெல்லி முஸ்தாபாத் பகுதிக்கு கடந்த 25-ம் தேதி திரும்பியுள்ளனர். இந்நிலையில், எலக்ட்ரிஷீயனான ஹூசைனை எலக்ட்ரிக்கல் வேலை நிமித்தமாக யாரோ கூப்பிட அதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது தான் டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ளாமலே அந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
வெளியே சென்ற ஹூசைன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, டெல்லி கலவரக்காரர்களிடம் சிக்கி கழுத்தில் குத்தப்பட்ட காயங்களுடன், மார்பில் துளைத்த 3 குண்டுகள் உள்பட 5 குண்டுகளுடன் உயிரிழந்துள்ளார். அவரது வரவை எதிர்நோக்கி இருந்த மனைவி, கணவர் இறந்த அதிர்ச்சியை கேட்டு இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை. வீடு திரும்புவார் கணவர் என்று ஆசையாக எதிர்நோக்கியிருந்ததால், தனது கணவர் இறந்த செய்தியையும் நம்பவில்லை. திருமணமாகி 11 நாட்களே ஆன நிலையில் கணவரை இழந்துள்ள சம்பவத்தால், மகனை இழந்த சோகத்திலும், தனது மருமகளை நினைத்து ஹூசைனின் தந்தை மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.
இதேபோல் முகமது சாதிக் என்ற ரிக்ஷா தொழிலாளி குண்டு அடிபட்டு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி தற்போது தான் கர்ப்பமாக உள்ளார். இதேபோல் திருமணமாகி 4 மாதங்கள், திருமணமாகி 3 மாதங்கள்தான் என புதிதாக திருமணம் ஆன 3 பேர், ஒரு கார்பெண்டர், ஒரு டி.ஜே., ஒரு தொழில் முனைவோர், கட்டிடத் தொழிலாளி, குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கச் சென்ற அப்பா… என இது வரை டெல்லி கலவரத்தில் இறந்து போன 38 நபர்களில் இவர்களும் அடக்கம். வன்முறை மேலும் ஏற்படாத வண்ணம் தற்போது கலவர பகுதிகளில் டெல்லி போலீசார் பேரணி நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தங்கச்சிய' லவ் பண்ணேன்... என்ன 'கல்யாணம்' பண்ணிக்கன்னு டார்ச்சர் பண்ணா அதான்... 'கடலூரில்' இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
- ‘அவனுக்கு இப்போதான் பொண்ணு பாத்துட்டு இருந்தோம்’.. ‘என் மகனை ஏன் கொல்லணும்’.. கதறி அழுத குடும்பம்..!
- 'கலவர' பூமியில் காக்கப்பட்ட 'உயிர்கள்'... "அவர்கள் மட்டும் வரவில்லை என்றால்..." 'கண்ணீரால்' நன்றி சொல்லும் '80 குடும்பங்கள்'...
- ‘பிரியாணி சாப்பிட்டுவிட்டு கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!’.. 2 மனைவிகளின் கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!
- "சார்... அண்டாவுக்கு முதல்ல பாதுகாப்பு குடுங்க சார்..." "இப்பல்லாம் தங்கத்தை விட இதுக்குத்தான் மதிப்பு அதிகம் சார்..." 'நூதன' மனுவால் திகைத்துப் போன 'போலீசார்'...
- 'இந்த வழி நல்ல வழி'... ‘தனி வழி அல்ல’... 'அப்படி வாங்க நண்பா'... ரஜினிகாந்திற்கு சபாஷ் போட்ட கமல்ஹாசன்!
- வீட்ல 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு... இப்டித்தான் பண்றதா?... 'மதுரை' நபரை தட்டித்தூக்கிய போலீஸ்!
- ஏன் இதுவரைக்கும் 'விட்டு' வச்சிருக்கீங்க?... எல்லார் மேலயும் 'நடவடிக்கை' எடுங்க... விரைவில் 'மொத்தமாக' தூக்கப்போகும் போலீஸ்?
- லாரியை 'முந்த' முயன்றபோது.... 'நொடியில்' நேர்ந்த விபரீதம்... சம்பவ இடத்திலேயே 'பலியான' வாலிபர்கள்!
- கணவர்களுக்காக வீதிக்கு வந்து 'போராடிய மனைவிகள்'!... அதிரவைக்கும் காரணத்தால்... குமரியில் பரபரப்பு!