‘விலையைக் கேட்டா வாங்கணும்’.. ‘கடைத் தெருவில் இளைஞருக்கு’.. ‘நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் ஹெட்ஃபோன் வாங்க மறுத்த இளைஞரை வியாபாரிகள் கொடூரமாக அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த முகமது ஓவைஸ் என்ற இளைஞர் திங்கட்கிழமை டெல்லியிலிருந்து ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது ஹெட்ஃபோன் வாங்குவதற்காக அருகில் இருந்த ஒரு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு கடைக்காரர் அயூப் சொன்ன விலை அதிகமாக இருந்ததால் தனக்கு பொருள் வேண்டாமென சொல்லிவிட்டுக் கிளம்பியுள்ளார்.

ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து வந்த அயூப், “ஹெட்ஃபோனை பயன்படுத்தி விட்டாய். அதனால் அதை வாங்கியே ஆக வேண்டும்” எனக் கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு முகமது மறுப்பு தெரிவிக்கவே தனது சக வியாபாரிகளையும் அழைத்து வந்த அயூப் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முகமது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சுயநினைவை இழக்கும்வரை முகமது ஓவைஸ் கடுமையாகத் தாக்கப்பட்டார் எனக் கூறியுள்ளனர். ஆனால் போலீஸார் அவருடைய உடலில் வெளிக்காயங்களே இல்லை என அதை மறுத்துள்ளனர். கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட அயூப் மற்றும் லல்லான் என்ற 2 பேரை கைது செய்துள்ள போலீஸார் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

DELHI, TEACHER, BEATEN, DEAD, BRUTAL, HEADPHONES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்