'ஓர் பாலின திருமணம் தனி மனிதனோட உரிமை...' 'இத அக்செப்ட் பண்ணாதது அரசியலமைப்புக்கு எதிரான விஷயம்...' - டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இரு ஓரினசேர்க்கை தம்பதிகள் தங்களின் திருமணம் சமூக அளவில் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் இது அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு ஓரினசேர்க்கை தம்பதிகள் தங்கள் திருமணம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளவும் தடையாக உள்ளதாக மனு சமர்ப்பித்துள்ளனர்.
 
முதல் மனுவில் மனநல நிபுணர்கள் கவிதா அரோரா, 47, மற்றும் அங்கிதா கன்னா, 36 - ஆகியோர் தம்பதிகள் 8 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், ஒருவருக்கொருவர் காதலிப்பதாகவும், ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல் இந்திய குடிமகன் வைபவ் ஜெயின் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு குடிமகனான பராக் விஜய் மேத்தா ஆகியோர் கடந்த 2017ல் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் தற்போது கொரோனா தொற்று சமயத்தில் இந்தியாவிற்கு திரும்ப முயற்சிக்கும் போது, இந்திய தூதரகம் 1969 ஆம் ஆண்டின் கீழ் தாங்கள் செய்துகொண்ட திருமணத்தை மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஓர் பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரிய வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுபியுள்ளது. ஓர் பாலின திருமணம் தனி மனிதனின் உரிமை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்