‘ஹவுஸ் ஓனர்ஸ் தொல்லை பண்ணக்கூடாது!’.. ‘இவங்களுக்கெல்லாம் அரசே வாடகை குடுக்கும்!’ - அதிரடியாக அறிவித்த டெல்லி முதல்வர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா எதிரொலி காரணமாக வீட்டு வாடகை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. வாடகைக்கு குடியிருப்போர்களிடம் வாடகை கேட்டு தொல்லை தர கூடாது என்றும் குறிப்பாக  இந்த கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்து வாடகை செலுத்த இயலாமல் டெல்லியில் வசிக்கும் வெளிமாநில குடும்பங்களுக்கு அரசே செலுத்தும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா எனும் கொடிய நோயால்,  டெல்லியில் வாடகைக்கு குடியிருந்து வரும் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானதாலும், நகரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், தத்தம் கிராமத்துக்கு நிறைய மக்கள் புறப்படுவதாலும் டெல்லி பெரும் நெருக்கடியை சந்தித்தது. இதனை சரிசெய்யும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு, வீட்டு வாடகை விஷயத்த்தில் இந்த முடிவினை எடுத்துள்ளது.

இதேபோன்ற சில கோரிக்கைகள் தமிழகத்திலும் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே தமிழகத்தில் திருப்பூர் கொடிக்கம்பம், மூர்த்தி நகர் பகுதியில் இருக்கும் சுந்தர்ராஜன் என்பவர், தனது மகளின் ஆலோசனைப்படி, தனக்கு சொந்தமான குடியிருப்பில் வசிக்கும் 12 வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்கள் 2 மாதங்களுக்கு வீட்டு வாடகை தர வேண்டாம் என்று வாடகைதாரர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருக்கும் அனைத்து வீட்டு உரிமையாளர்களிடமும் இப்படியானதொரு முடிவை எடுத்து எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்