63 போலி டெபிட் கார்டு.. 50 லட்சம் ரூபாய் பணம்... 'குடும்பமே சேர்ந்து கூட்டாக பார்த்த வேலை!'.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போலி டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை தயாரித்து அவற்றின் மூலம் பண மோசடி மற்றும் விலையுயர்ந்த பொருட்களை அந்த பணத்தின் மூலம் வாங்கியது உள்ளிட்ட பல மோசடிகளை செய்து கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 8 பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்களிடமிருந்து இவர்கள் பயன்படுத்திய 63 போலி டெபிட் காடுகளையும், 13 போலி கிரெடிட் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கும்பல், இதுவரை 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 50 லட்சம் ரூபாய் வங்கி பணம், 18 போலி ஆதார் அட்டைகள், 30 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், 15 சிம் கார்டுகள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் இவர்கள் பயன்படுத்தியதாக கூறிய அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

சுமார் 36 போலி ஆவணங்களுடன் வங்கி கணக்குகள் தொடங்கிய இந்த மோசடி குடும்பத்தினர் குறித்து சிட்டி வங்கி அளித்த புகாரின் பேரில்தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்